ரமணகிரி சுவாமிகள் - மறைக்கப்பட்ட வரலாறு










திருவண்ணாமலை நமக்கு பல மகான்களை தந்திருந்தாலும்அதில் முதன்மையானவர் என்று ரமண மகரிஷியை சொல்லலாம்ரமணரை தமிழகத்தில் பலருக்கு அறிமுகபடுத்தியது இசைஅமைப்பாளர் இளையராஜா.இளையராஜாவிற்கு  ரமணர்தான்  ஆன்மீக  குரு.ரமணருக்காக இளையராஜாஇயற்றிய "ராஜாவின் ரமணமாலை",பக்தி பாடல்களில் மிகவும் ஹிட் அடித்தஆல்பம். "பிட்சை பாத்திரம்  ஏந்தி வந்தேன்" பாடல்கூட ரமணமாலைஆல்பத்தில்  இருந்து நான் கடவுள் படத்தில் பயன்படுத்தப்பட்டது என்று பலரும்அறிந்திருப்பீர்கள்.. 

ரமண மகரிஷி தனது பக்தர்களுக்கு "silent teacher" என்று உணரபடுகிறார்.எல்லோரும் இப்போது பயன்படுத்தும் "நான் யார்" என்ற தத்துவவிசாரணைக்கு சொந்தக்காரர்.ரமண மகரிஷிக்கு  இந்தியா மட்டுமில்லாமல்  வெளிநாடுகளில் இருந்தும் பல பேர்  சீடர்களாகஇருந்தனர்.அதில் குறிப்பிடும்படி சொல்லவேண்டும் என்றால் டேவிட்கோதமன்(David Godman), இவர்தான் ரமணரை வெளி உலகத்துக்கு தனதுபுத்தககங்கள்வலைத்தளம் மூலம் அறிமுகபடுத்தினார்அதேபோலஇந்தியாவில் ரமணரின்  முக்கிய சீடர் என்று உத்தர் பிரதேசத்தை  சேர்ந்தபாப்பாஜியை சொல்லலாம்.



பீர் வேர்டின்

இதே போல் பலருக்கு ரமணர் ஆன்மீக குருவாக இருந்தாலும் நார்வே நாட்டைசேர்ந்த பீர் வேர்டின்(per wertin) ரமணரின் மிக மிக முக்கியமானசீடர்களுள் ஒருவராக இருந்திருக்கிறார்ஆனால் இவரை பற்றி எந்த குறிப்பும்ரமணர் பற்றிய வரலாற்றில் இல்லை.இவரை ஏன் இருட்டடிப்பு செய்தார்கள்அல்லது தற்செயலாக இவரை பற்றி எந்த தகவலும் இல்லாமல் இருக்கிறதாஎன்று தெரியவில்லை.

நார்வேயிலிருந்து தத்துவவியல் படிப்பு படிக்க இந்தியா வந்த மாணவர்தான் பீர்வேர்டின் .பனாரஸ் பல்கலைகழகத்தில் கல்லூரி படிப்பில் வேர்டின்சேர்ந்தாலும்அவருக்கு ஆன்மீக தேடலில் அதிகம் விருப்பம்இருந்திருக்கிறது.“ராஜா யோகா”,”பதஞ்சலி யோகா “போன்ற யோக  முறைகளைஅவர் கற்றிருக்கிறார்இந்தியாவில் அவரின் ஆன்மீக தேடலுக்கு நல்லவழிகாட்டியாக இருந்தவர் சுன்யட்டா.சுன்யட்டா டென்மார்க்கைசேர்ந்தவர்,ஆன்மீக தேடலில் வேர்டினை போல் அதிகம் நாட்டமுள்ளவர்சுன்யட்டா.இவர்தான் பின்னர் ரமண மகரிஷியை வேர்டினுக்குஅறிமுகப்படுத்தினார்ரமண மகரிஷி அந்த காலகட்டத்தில்தான் ஒரு மௌனஆன்மீக புரட்சியை தென் தமிழகத்தில் செய்து கொண்டிருந்தார்.

அதீத ஆன்மீக ஈடுபாட்டால் பனாரஸ்சில் இருக்கும் ஒரு சாதுவிடம்  ஆன்மீக தீட்சை வாங்கி கொள்கிறார் வேர்டின் .பிறகு அவரது  தேடல் முழுதும்ஆன்மீகத்தை நோக்கி மட்டுமே இருந்திருக்கிறதுபடிப்பில் அதிகம் விருப்பம்இல்லாதவராய் ஆன்மீக தேடலை மட்டும் விரிவுபடுத்திக்கொண்டே சென்றவேர்டின்,அதற்க்கு தனக்கு தீட்சை அளித்த சாது பல வழிகளில் உதவிசெய்துள்ளார்..(வேர்டினுக்கு தீட்சை அளித்த சாதுவின் பெயர் தெரியவில்லை )





                 பீர் வேர்டின் நார்வேயில் இருக்கும்போது


வேர்டின் பின்பு 1949ம் ஆண்டு சுன்யட்டா அறிமுகம் செய்த ரமணரை சந்திக்கதிருவண்ணாமலைக்கு வருகிறார்.ரமணரை பார்த்ததும்  இவர்தான்  நான்இவ்வளவு நாள் தேடிய குரு என்று எண்ணி ரமணரின் முழு  நேர சீடராக மாறுகிறார் வேர்டின்திருவண்ணமலையில் இருக்க துவங்கிய வேர்டின்தனது ஆன்மீக ஆராய்ச்சியை தொடர்கிறார்.அங்கு இருக்கும் பல குகைகள்வேர்டின் தியானம் செய்யும் இடமாக மாறின.பின்னர்  ரமணரின் முன்பு 48நாள்  "ஆத்ம  விசாரா"(self enquiry) என்ற  தியான முறைப்படி தியானம் செய்து"நான் யார்"  என்ற தத்துவ விசாரணையை மேற்கொள்கிறார்ஒரு சிவராத்திரிநாளன்று தன்னுள் இருந்து  இயங்கும்  அந்த பிரபஞ்ச இயக்கம் வெடித்து "நான்யார்" என்று தன்னை முழுதும் அறிந்து கொள்கிறார் வேர்டின்.

அன்று அவர் உணர்ந்த அந்த அனுபவத்தை கீழ் கண்டவாறு விவரிக்கிறார்.

"I don’t know anything,
and that ‘I’ which knows is nothing but an ignorant fool.

I think, when I don’t think,

that I have no end and no beginning.

That which thinks has to take thousands of births.

When there is ‘I’ He is not; when He is, I am not."


வேர்டின்    à    ரமணகிரி.

வேர்டினுக்கு ரமணர் "ரமணகிரி" என்று பெயர் மாற்றம் செய்கிறார்.ரமணகிரிஎவ்வளவு நாள் ரமணருடன் இருந்தார் என்று தெரியவில்லை,ஆனால் ரமணர்இறக்கும்போது ரமணகிரி ரமணருடன் இருந்திருக்கிறார்.அந்த சமயத்தில்இமயமலையில் இருந்த ரமணகிரியை  ரமணர் ஒரு வித எண்ண அழைப்பால் அழைக்க (psychic message) ,ரமணாஸ்ரமம்  வந்திருக்கிறார் ரமணகிரி.ரமணகிரி வந்து சில நாட்களில் ரமணர் சமாதி அடைந்திருக்கிறார்.ரமணகிரிதிரும்ப இமயமலைக்கு செல்ல நினைத்து சென்னையில் சில நாள் தங்கிருக்கும் அச்சமயத்தில்ரமண மகரிஷி  ரமணகிரியின்  கனவில் தோன்றி  "இமயமலைக்கு செல்ல வேண்டாம்இங்கயே உன் ஆன்மீக சேவையை தொடரசொல்லிருக்கிறார்தன்  குருவின் விருப்பபடி தனது ஆன்மீக சேவையை தொடரஅவர் தேர்ந்தெடுத்த இடம் சென்னை ,திருவான்மியூர்.




சென்னை   à   மதுரை


திருவான்மியூர் கடற்கடையில் ஒரு சிறு குடிசை அமைத்து தியானித்து(பலதியான முறைகளை பயன்படுத்தி)வந்த ரமணகிரியின் மேல்  அங்குள்ள பல மீனவர்கள்   தங்கள்  அன்பை  வெளிபடுத்தியுள்ளனர்பல மீனவர்கள் அவரின் பக்தர்  ஆகிருக்கிறார்கள்.ஆனால் யாருக்கும் தான்  ஒரு குருவாக  இருக்க அவர்  என்றுமே எண்ணியதில்லை,மாறாகஅவர்களே பல தத்துவ தியான முறைகளை மேற்கொண்டு தன்னை  அறிய வேண்டும் என்று எண்ணினார்சில நாள் கழித்து மற்றுமொரு கனவுரமணகிரியை  இந்த முறை மதுரைக்கு போக சொல்கிறார்ரமண மகரிஷி.பின்னர் ரமணகிரி மதுரைக்கு அருகில் இருக்கும் சிறுமுலைபகுதியில் தனது அடுத்து வரும் காலங்களை கழித்தார்.அங்கு தங்கிருந்த சமயம்இவரை பற்றி பலர் தெரிந்துகொண்டு ரமணகிரியை பார்க்க வருவார்கள்பலர்பக்தர் ஆனார்கள்.ரமணர்தான் தன்னை இயக்குவதாக எண்ணிய ரமணகிரிசிறுமுலையிலேயே  தங்கினார்.




                     சமாதியில் இருக்கும் ரமணகிரி படம் 



சமாதி..

தனது 34ம் வயதில் டுய்பர்கிளோசிஸ்(Tuberclosis) நோய் ரமணகிரியைதாக்கியது.பின்னர் உடல்நலம் மேலும் மோசமடையவே அவரால் எழுந்து நடக்கமுடியவில்லைஅப்பொழுது தன் பக்தர்களிடம்  இந்த கஷ்டம் என்உடலுக்குத்தான்எனக்கில்லை என்று சொல்லுவாராம்அந்த சமயங்களில்பக்தர்கள் கொண்டு வரும் பழங்களை காணிக்கையாக பெற்று வந்தார்.ஒருநாள்பக்தர் தந்த மாம்பழத்தை  சாப்பிட்டுவிட்டு  நாளை இது குப்பையாகபோகபோகிறது என்று சிரித்துக்கொண்டே சொல்லிருக்கிறார்அதே இரவுஉடல்நலம் மேலும் மோசமைடைய அன்றிரவே தனது 34ம் வயதில் 1955ம்ஆண்டு  புற உலகிலிருந்து விடை பெற்றுருக்கிறார் ரமணகிரிஅவர்கடைசியாக  இறக்குமுன்  உச்சரித்த வார்த்தை “Let us go”.



                    சமாதியில் வைக்கப்பட்டுள்ள  லிங்கம் 



ரமணகிரி சிறுமுலையில் தங்கியபோது அவ்விடம்  ரமண பாதம் என்றபெயரால் அழைக்கப்பட்டது.அங்கேயே அவரின் சமாதி இப்பொழுது உள்ளது.(வாடிப்பட்டி அருகே). சிவலிங்கம் ஒன்றும் சமாதி மேல்வைக்கப்பட்டுள்ளதுஇரண்டு ஆண்டுக்கு ஒருமுறை சிவராத்திரியன்று2000க்கும்  அதிகமான அவரின் பக்தர்கள்  கூடிஏழைகளுக்கு அன்னதானம்செய்து அவரை வழிபடுகிறார்கள்.


Cold fire..

ரமண மகரிஷியை தனது ஆன்மீக குருவாக ஏற்று தன் வாழ்நாள் இறுதி வரைதமிழகத்தில் வாழ்ந்து மறைந்திருக்கிறார் ரமணகிரி."ஆத்மா விசாரா" என்ற"நான் யார்" தேடுதலுக்கு பின் தன்னை ஒரு முட்டாள்  என்றே தன்னை பார்க்கவருபவர்களிடம் சொல்லிருக்கிறார் ரமணகிரிசிறுமுலை பகுதியில்தங்கியிருக்கும் போது தனது பக்தரான ராமசந்திரன்தனது எண்ணங்களைஒரு தொகுப்பாக வெளியிட கேட்டபோது அதற்கு  சம்மதித்து இருக்கிறார்ரமணகிரி..அதற்கு அவர் வைத்த  பெயர் "Cold Fire".

“Cold fire”தொகுப்பிலிருந்து சில...
  • His Name, taken once with wholehearted love and a one-pointed mind, is worth more than the knowledge collected from every book all over the world.
  • Learning is learned ignorance. Unlearning is learning.
  • What you speak about others doesn’t reveal anything about them, but about you.
  • The power of listening attracts more than the power of speaking.
  • Jnana and bhakti are not separate from each other. One cannot know Him without loving Him, and one cannot love Him without knowing Him.
  • Non-attachment does not mean indifference; love does not mean attachment; attachment is that which takes; love is that which gives.
  • Shut the doors and the door will be opened.
  • Religion is experience. It should be practised, not studied or discussed, and at the very least not preached. Those who preach don’t know; those who know don’t preach.
  • About your worldly troubles: you must do as you think best yourself, but it is good policy to keep away from other’s plates, however sweet and inviting they look. Both sugar and arsenic are white.
  • The behaviour of a fool and a wise man is the same. The only difference is that a fool goes from life to lives while a wise man goes from lives to Life. One leaves the ocean behind; the other returns.
  • Lord Ramana, Lord Subramania, Lord Siva, my Father and the Self are one and the same. Mother is His tool, Arunagiri their child, and Ramanagiri this fool.



எனக்கு ரமணரை அறிமுகப்படுத்தியதுஎன் நண்பன் இளையராஜா.திருவண்ணாமலைக்கு  அடிக்கடி செல்லும் என்நண்பன் கூற கேட்டு,ரமணரை பற்றி அதிகம் தெரிந்துக்கொள்ள முடிந்தது.மேலும்ரமணரை பற்றி  தெரிந்துக்கொள்ள முயற்சி எடுத்து அவரின் வரலாற்றைபடிக்கும்போதுஎதோ ஓர்  இடத்தில்  ரமணகிரியை பற்றி சிறு குறிப்புஇருந்தது."Devotees of Ramana" போன்ற தொகுப்பில்க்கூட ரமணகிரியின்செய்திகள் இல்லைரமணகிரியின்  வரலாறு பெரிதும்கண்டுகொள்ளப்படவில்லை என்பதில் வருத்தம்தான்.இந்த பதிவு ரமணகிரியின் வரலாற்றை தமிழ் வாசகர்களுக்கு தொகுத்தளிக்கும்  சிறு முயற்சியே..இந்த பதிவுமூலம் சில நூறு  நண்பர்களுக்கு  ரமணகிரியின் வரலாறு சென்றடைந்தால்மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.