BANANA LEAF BATH


          Take a long BANANA LEAF. Make a sleep over it and then take bath over it. It will increases the IMMUNITY in your Body. Nowadays many 
Doctors also suggesting this type of Bath for a Healthy Life.

தொட்டால் சிணுங்கி

தொட்டால் சிணுங்கி போல எதற்கு எடுத்தாலும் சிணுங்கிக்கொண்டு இருக்கிறாயே என்று பலர் சொல்வதுண்டு . நாம் அனைவரும் எத்தனையோ முறை கேட்டும் இருக்கிறோம் . அதே வார்த்தைகளை நாமும் பயன்படுத்தியும் இருக்கிறோம் . ஆனால் இந்த தொட்டால் சிணுங்கி பற்றி எத்தனை பெருக்கு முழுமையாகத் தெரியும் என்று கேட்டால் . அதிகமானோர் சொல்லும் பதில் தொட்டால் சிணுங்கும் அதுதான் தொட்டால் சிணுங்கி என்று சொல்வதுண்டு .ஆனால் அதையும் தாண்டி அப்படி என்னதான் இருக்கிறது தொட்டால் சிணுங்கிற்குள் என்று நாமும் தெரிந்துக்கொள்வோமே என்ற ஆவல் அதிகரிக்க நான் அறிந்தததை நீங்களும் அறிந்திடவேண்டும் என்று எண்ணத்தில் தோன்றியதுதான் இந்த பதிவு .சரி இனி விசயதத்திற்கு வருவோம்


லகத்தில் முதல் முதலில் இந்த தொட்டா சிணுங்கி தாவரம் South America and Central America, ஆகியா நாடுகளில் பிறந்துதான் சிணுங்கத் தொடங்கியதாம் . தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சில மருந்து வகை மூலிகைகளில் இந்த தாவரமும் ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்து இருக்கிறது . மருத்துவர்களின் ஆலோசனைக்கு அமைவாக இவற்றை உபயோகித்தால் தீராத பிணிகள் நீங்கி விடுகின்றன. தாவரங்களில் மிக விநோத மாகவுள்ளதொட்டாச்சிணுங்கிஎன்ற ஒரு வகைச் செடியை தாவரவியலாளர் மிமோஸாபொடிக்கா என்ற பெயர் கொண்டு அழைக்கின்றனர். நாம் தொட்டவுடனே சுருங்கும் தன்மை கொண்டதால் தொட்டாச் சுருங்கி என்று பெயர் இருந்து வந்தது காலப் போக்கில் இந்நாமம் தொட்டால் சிணுங்கி என்று மருவியதாம்.தொட்டால் சிணுங்கியில் இரண்டு வகை உண்டு. ஒன்று, நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வளரும். மற்றொன்று, சாதாரண இடங்களில் கூட வளரும். கல்வராயன் மலையில் உருவாகி, பாயும் ஏராளமான சிற்றாறுகள், நீரோடை, ஏரி போன்ற நீர் நிலைகளை ஒட்டிய பகுதிகளில் தொட்டால் சிணுங்கி என்ற செடி அதிகமாகக் காணப்படும்.

தன் இலைகளைத் தொட்டால் அவை அசைகின்றன. இவ்வாறு அசையும்போது, காம்பு செல்களில் இருக்கும் நீர் தண்டிற்குள் செல்கிறது. இதனால் செல்கள் சுருங்கி, விரிந்திருந்த இலைகள் மடிந்து ஒட்டிக் கொண்டு விடுகின்றன. சிறிது நேரத்திற்குப் பின் அவை தானாக சரியாகி இலைகள் மறுபடியும் விரிந்து விடுகின்றன.”தொட்டால் சிணுங்கி மலர்கள் அழகானவை. இச்செடிகள் பூத்துக் குலுங்கினால், “பஞ்சம்போகும் என்பது காலம் காலமாக நிலவி வரும் ஒரு நம்பிக்கை. தொட்டால் சிணுங்கி பூத்தால் நல்ல மழை பெய்யும், நல்லவை அதிகமாக நடக்கும் என்பார்கள்.

மைமோசாபூடிகா என்ற தாவரயியல் பெயர் கொண்ட தொட்டால் சிணுங்கிச் செடியைக் கவனித்தால் , அவை கூட்டு இலைகளைக்கொண்டிருக்கும் . அந்தக் கூட்டு இலைக் காம்பிற்கு அடியில் தண்டுடன் ஒட்டிக்கொண்டுள்ள பகுதி சற்று பருத்த முண்டு போல இருக்கும் . இந்த முண்டுவானது மெல்லிய சவ்வுச் செல்களால் ஆனது . இந்தச் செல்லினுள் நீர் மூலக்கூறுகள் எளிதில் சென்று வரமுடியும் .இந்த முண்டுவில் நீர் நிறைந்திருக்கும் போது இலைகள் விரிந்த நிலையில் இருக்கும் . இச் செடியைக் காற்று , பூச்சி , விலங்கு , மனிதன் , மழை துளி தொட சட்டென்று வெளிப் புற உணர்வுகள் உட்சென்றதும் , முண்டுகளில் இருக்கும் செல்கள் நீரை இழக்கின்றன .இதனால் இலைகள் சுருங்குகின்றன . இதன் பிறகு மீண்டும் பழைய நிலைக்கு வர முண்டில் நீர் நிறைய வேண்டும் . இதற்கு 15 முதல் 30 நிமிடம் ஆகும் .இலை காம்பில் சவ்வூடு பரவல் அழுத்த வேறுபாடு காரணமாகவே இந்த இயக்கம் ஏற்படுகிறது .மனிதர்களுக்குள் உணர்ச்சிகளை ஏற்படுத்தக்குடிய அதே வகையான செல்கள் இந்த வகை தாவரததிற்குள்ளும் காணப்படுவதாக ஆய்வுகள் தெருவிக்கின்றன .

துவும் ஒரு மூலிகை. சித்த மருத்துவத் துறையில் கூட்டு மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. காயங்களில் இருந்து வெளியேறும் ரத்தம் சிலருக்கு உறையாது. சித்த வைத்திய முறையில், ரத்தத்தை உறைய வைக்க தயாரிக்கப்படும் மருந்தில் தொட்டால் சிணுங்கி பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்தும் மருத்துவ குணமும் தொட்டால் சிணுங்கி செடிக்கு உண்டு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் . இதுபோன்று இன்னும் நாம் தினம் தோறும் பார்த்து ரசிக்கும் செடிகளில் எத்தனை விந்தைகளை மறைத்து வைத்திருக்கிறதோ இந்த இயற்கை !