நிரந்தரம் உடைவது நிதர்சனம் ஆகையால்...

 *உடைந்த காலம்*


நட்பு உடைந்து முகநூலானது...

சுற்றம் உடைந்து 

வாட்சப் ஆனது...

வாழ்த்துக்கள் உடைந்து ஸ்டேட்டஸ் ஆனது...

உணர்வுகள் உடைந்து ஸ்மைலியாய் ஆனது...


குளக்கரை உடைந்து குளியலறை ஆனது...

நெற்களம் உடைந்து கட்டடமானது...

காலநிலை உடைந்து வெப்பமயமானது...

வளநிலம் உடைந்து தரிசாய் ஆனது...


துணிப்பை உடைந்து நெகிழியானது...

அங்காடி உடைந்து அமேசான் ஆனது...

விளைநிலம் உடைந்து மனைநிலம் ஆனது...

ஒத்தையடி உடைந்து எட்டுவழியானது...


கடிதம் உடைந்து இமெயிலானது...

விளையாட்டு உடைந்து வீடியோகேம் ஆனது...

பல்பம் உடைந்து பால்பாயின்ட் ஆனது...

புத்தகம் உடைந்து 

இ-புக் ஆனது...


சோறு உடைந்து 'ஓட்ஸ்'சாய்ப் போனது..

இட்லி உடைந்து 

பர்கர் ஆனது...

தோசை உடைந்து பிட்சாவானது...

குடிநீர் உடைந்து 

குப்பியில் ஆனது...


பசும்பால் உடைந்து பாக்கெட் ஆனது...

வெற்றிலை உடைந்து பீடாவானது...

தொலைபேசி உடைந்து கைபேசியானது...

வங்கி உடைந்து 

பே டி எம் ஆனது...


நூலகம் உடைந்து கூகுளாய்ப் போனது...

புகைப்படம் உடைந்து செல்ஃபியாய் ஆனது...

மார்க்கம் உடைந்து மதவெறியானது...

அரசியல் உடைந்து அருவெறுப்பானது...


பொதுநலம் உடைந்து சுயநலமானது...

பொறுமை உடைந்து அவசரமானது...

ஊடல் உடைந்து விவாகரத்தானது...

காதல் உடைந்து 

காமமாய்ப் போனது...


நிரந்தரம் உடைவது நிதர்சனம் ஆகையால்...

உடைவது உலகினில் நிரந்தரமானது...

தீயவை உடைத்து நீ தீங்கறச் செய்திடில்...

அல்லவை உடைந்திங்கு நல்லவை வாழுமே...

கல்விக்கடன்

 *மத்திய அரசின் இந்த புதிய உத்தரவை தெரிந்து கொள்ளுங்கள்*


பொறியியல், மருத்துவ பட்டப்படிப்பு, மற்றைய பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற இனி வங்கி வாசலில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் காத்திருந்து அலைய வேண்டாம்.


அதற்கு பதிலாக கல்விக்கடனுக்காகவே *‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’* (Pradhan Mantri Vidyalakshmi Karyakram) எனும் இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. *இந்த தளத்தின் மூலமே இனி அனைத்து கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களும் அனுப்பப்பட வேண்டும்.* மாறாக எந்த வங்கியும் தனிப்பட்ட முறையில் கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி மத்திய நிதி அமைச்சகம் அனைத்து அரசு வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து கல்விக்கடன்களுக்கான விண்ணப்பங்களையும், ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளம் வாயிலாகவே பரிசீலனை செய்ய வேண்டும் என ஆணையிட்டுள்ளது.

ஆதலால், இனிமேல் 12-ஆம் வகுப்பு (+2) முடித்த மேற்படிப்புக்கு வசதியில்லாத ஏழை எளிய மாணவ, மாணவிகள் பொறியியல், மருத்துவ பட்டபடிப்புக்கும், பட்டமேற்படிப்புகள் படிக்கவும் கடன் பெற வங்கியில் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளத்தில் சென்று, அதில் உள்ள கல்விக்கடனுக்கான விண்ணப்பத்தில் கேட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, எந்த வங்கி மூலம் கல்விக்கடன் வேண்டும் என்ற தகவலையும் தெரிவித்து அதை அனுப்பிவைக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் முறைப்படி பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, கல்விக்கடன் குறித்த அழைப்பு வங்கி மூலம் சம்பந்தப்பட்ட மாணவருக்கு கடிதமாக அனுப்பப்படும்.  இந்த திட்டம் இந்த  (2021)  ஆண்டிலிருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.


 “ ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ 

https://www.vidyalakshmi.co.in/Students   எனும் இணையதளத்தின் மூலமே அனைத்து கல்விக்கடன்களுக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட வேண்டும்" என மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. 


*இதை எல்லா பெற்றோருக்கும், மாணவ, மாணவியர்க்கும் தெரியப்படுத்தலாம்*

நடைபயிற்சி


🚶🚶 *நடைபயிற்சியின் வகைகளும் - பயன்களும்:*


🚶🚶 *நடைபயிற்சி என்றால் என்ன?*


🚶🚶 *நடைபயிற்சி (Walking) என்பது நோயின்றி வாழ மிகவும் முக்கியமான ஓரு செயல்பாடாகும்.*


🚶🚶  *நடைபயிற்சியில் மூன்று வகைகள் உண்டு.*


🚶 🚶 *மெதுவாக நடப்பது*


🚶🚶 *எப்போதும் நடக்கும் சாதாரண வேகமின்றி, சிரமமின்றி நடப்பதாகும்.*


🚶🚶 *இந்த வகை நடைபயிற்சி உடல் வலி மற்றும் சோர்வுகளை போக்கும்.*


🚶🚶 *உடம்பில் உள்ள தசைகளையும், எலும்பு இணைப்புகளையும் இதமாக்கி காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.*


🚶🚶 *உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஏற்ற நடையாகும்.*


🚶 🚶 *பவர் வாக்கிங்*


🚶 🚶 *கைகளையும், கால்களையும் வேகமாக வீசி நடப்பது.*


🚶 🚶 *இப்படி வேகமாக நடப்பதால் உடம்பில் உள்ள கழிவுகள் எரிக்கப்பட்டு வியர்வை அதிகம் வெளியேறி உடல் சுத்தமாகும்.*


🚶 🚶 *தசைகளும் எலும்புகளும் அதிக வலுவைப் பெற்று தன்னம்பிக்கையை அளிக்கும்.*


🚶 🚶 *இந்த பவர் வாக்கிங் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற நடையாகும்.*


🚶 🚶 *ஜாகிங்*


🚶🚶 *நடக்கும் முறையில் இருந்து சற்று வித்தியாசப்பட்டு மிதமாக, மிக மிக மெதுவான ஓட்டமாக மாறும்.*


🚶 🚶 *அதனால் நிறைய ஆக்ஸிஜன் நுரையீரலுக்குள் சென்று ரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்திற்கு அனுப்புகிறது.*


🚶🚶 *அதேசமயம் தேவையில்லாத கழிவுப்பொருட்களை வெளியேற்றி உடம்பில் உள்ள ஓவ்வொரு அணுவையும் சுத்தம் செய்யும்.*


🚶 🚶 *தினசரி 1/2 மணி முதல் 1 மணி நேரம் வரை ஜாகிங் செய்யலாம்.*


🚶 🚶 *இளைஞர்கள் 1 மணி நேரமும், 30-40 வயதினர் 45 நிமிடங்களும், அதற்கு மேற்பட்ட வயதினர் 20 நிமிடங்களும் நடக்கலாம்.*


🚶 🚶 *நடைபயிற்சி செய்வதனால் ஏற்படும் நன்மைகள்:*


🚶 🚶 *சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமடைய உதவுகிறது.*


🚶 🚶 *இரத்த ஓட்டம் சீரடையும்.*


🚶 🚶 *நரம்பு தளர்ச்சி நீங்கி, நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும்.*


🚶 🚶 *நாளமில்லா சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும்.*


🚶 🚶‍♂️*அதிகப்படியான கலோரிகள் எரிக்க உதவுகிறது.*


🚶 🚶 *நரம்புகளை உறுதியாக்குகிறது.*


🚶 🚶 *எலும்பு மூட்டு செயல்பாடுகளை எளிமையாக்குகிறது.*


🚶 🚶 *எலும்புகள் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கிறது.*


🚶 🚶 *உடலை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது.*


🚶 🚶 *கெட்ட கொழுப்புச்சத்தின் அளவை குறைக்கிறது.*


🚶 🚶 *மாரடைப்பு - சர்க்கரை நோயினை கட்டுப்பாட்டிற்குள் வைத்து உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது.*


🚶 🚶 *உடல் மற்றும் மனச்சோர்வினை குறைக்கிறது.*


🚶 🚶 *நன்கு தூங்கிட உதவுகிறது.*


🚶 🚶 *கண் பார்வையை செழுமைபடுத்துகிறது.*


🚶 🚶 🚶 🚶 🚶 🚶 🚶      🚶 🚶


ககன்தீப் சிங்

 இளைய சமுதாயமே ஒரு நிமிடம் இதை படியுங்களேன்.


படிக்கும் பொழுது கண்ணீர் மல்கியது. என்ன ஒரு பெருந்தகையாளர்! அடி பணிகிறேன் ககன்தீப் சிங் அவர்களே. 

மனந்திறந்து பாராட்டுங்கள் அன்பர்களே!!


முடிந்தால் உங்கள் வலைதளத்தில் பதியுங்கள்~~~பகிருங்கள்.


21 ம் நூற்றாண்டின் பென்னி குயிக் - கலெக்டர் ககன்தீப் சிங் பேடி...!!!


நாட்டில் அழிந்துபோன நதிகள், தூர்ந்து போன ஏரிகள், காணாமல் போன குளங்கள் போன்ற வரலாற்றைத்தான் கேட்டிருக்கிறோம். 


அவற்றை மீட்டதாக சரித்திரம் இல்லை.


ஆனால், இருந்த இடம் தெரியாமல், தண்ணீர் தங்கிய தடம் தெரியாமல். மொத்தமாக மண்ணுக்குள் புதைந்துபோன 1664 ஏக்கர் பரப்பளவு உள்ள வாலாஜா ஏரியை புயல், தண்ணீர் பஞ்சம், விவசாயிகள் தற்கொலைக்கு பெயர் போன கடலூரிலே மீட்கப்பட்டு உள்ளது. 


கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வறட்சியில் தவித்துக்கொண்டிருந்த 15 கிராமங்கள் இந்த மாதம் முதல் நெல், கரும்பு, வாழை என இருபோகத்துக்கு மாறியிருக்கின்றன.


 2003 இலிருந்து இதற்காக போராடி அந்த ஏரியை மீட்டவர் மிகுந்த மதிப்பிற்கும், மரியாதைக்கும், போற்றுதலுக்கும்  உரியவர் கலெக்டர்  ககன்தீப் சிங் பேடி  ஆவார்.


அவர் ஏரி மீட்ட வரலாறை பார்ப்போம். 


சத்தமில்லாமல் இந்தச் சாதனை நடந்திருப்பது நம் தமிழகத்தின் கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகேயிருக்கும் கரைமேடு கிராமத்தில் தான்.


2005-ம் ஆண்டு. கண்ணுக்கெட்டிய தூரம்வரை விரிந்து கிடந்தது புதர்க் காடு. தூரத்தில் நிலக்கரி சுரங்க எரிகோபுரங்களில் இருந்து வெண்புகை கசிந்துக்கொண்டிருந்தது. அப்போது நெய்வேலி சுற்றுவட்டார கிராமங்களில் கடும் வறட்சி நிலவிக்கொண்டிருந்தது.


 பரவனாற்றில் தண்ணீர் பார்த்து பல ஆண்டுகளாகிவிட்டதால் கம்மாபுரம், கொம்பாடிகுப்பம் ஆகிய ஏரிகள் அழிந்தேபோயிருந்தன.


 ஓரளவாவது தண்ணீர் இருக்கும் வெலிங்டன் ஏரியும் பெருமாள் ஏரியும்கூட காய்ந்துக்கிடந்தன.


கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ககன்தீப் சிங் பேடி ஒரு முறை, நெய்வேலி நிலக்கரி சுரங்க திட்ட பொறியாளர் துரைக்கண்ணுவிடம் ஒரு விஷயத்தை சொல்லியிருந்தார். 


அது, “நிலக்கரி சுரங்கத்திலிருந்து சேற்றை வெளியேற்றுகிற அந்த இடம் சாதாரணமானது கிடையாது.


 சுமார் 60 வருஷத்துக்கு முன்பு அழிந்து போன 1,664 ஏக்கர் பரப்பளவுகொண்ட பிரம்மாண்டமான ஏரி அது. 


அதில் 12 வாய்க்கால்கள், 15 கதவுகள் இருந்திருக்கின்றன. ஆவணங்களில் ‘வாலாஜா ஏரி’ என்கிற குறிப்பை தவிர, வேறு எதுவும் இல்லை. 


ஒருகாலத்தில் அந்த ஏரியின் மூலம் முப்போகம் விளைவித்திருக்கிறார்கள். இன்றும் ஏரியின் மதகுகள், இரும்புக் கதவுகள் எங்கேயோ புதருக்குள் கிடக்கலாம். மீண்டும் அங்கே ஆழப்படுத்தி ஏரியை மீட்டுவிட்டால் கடலூரில் வறட்சிக்கே இடமிருக்காது” என்பதாகும். 


நெய்வேலி லிக்னைட் நிறுவனம் நிலக்கரி வெட்டி எடுக்கும்போது வெளியேறும் நிலத்தடி நீரை சேற்றுடன் பரவனாற்றில் வெளியேற்றியது. 


அது வாலாஜா ஏரி வழியாக பெருமாள் ஏரிக்குச் சென்று கடலில் கலந்தது. 


இதனால் வாலாஜா ஏரி தூர்ந்து, ஒருகட்டத்தில் இருந்த இடம் தெரியாமல் மண்மேடாகி

அழிந்தே போனது. 


எனவே, சுரங்க நிர்வாகமே அந்த ஏரியை மீட்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அன்றைய கடலூர் மாவட்ட ஆட்சியர் 

ககன்தீப் சிங் பேடி.


சமூக பொறுப்புணர்வுத் திட்டம் அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களும் தங்களது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை, அந்த நிறுவனம் இயங்கும் பகுதி மக்களின் கல்வி, சமூகம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்கென ‘சமூக பொறுப்புணர்வு நிதி’யாக செலவிடவேண்டும் என்பது அரசு விதி. 


அதன்படி நெய்வேலி சுரங்க நிறுவனமும் ஆண்டுதோறும் தனது லாபத்தில் 10சதவீதத்தை செலவிட்டு வந்தது. 


ஆனாலும், அவை தையல் இயந்திரங்கள் கொடுப்பது, குடிநீர் தொட்டி கட்டுவது, இலவச நோட்டுப் புத்தகங்கள் கொடுப்பது என்பதாக மட்டுமே இருந்தன.


வாலாஜா ஏரியின் மொத்தப் பரப்பான 1664 ஏக்கரையும் மீட்க வேண்டும் என்றால் அதற்கு ரூ.60 கோடிக்கும் அதிகமாக நிதி தேவை. 


அவ்வளவு பெரிய நிதியை என்.எல்.சி. ஒதுக்குவது சாத்தியமில்லை. 


எனவே, பகுதி பகுதியாகவேனும் ஏரியை மீட்க வேண்டும் என்பது  ககன்தீப் சிங் பேடியின் திட்டமாக இருந்தது.


ஆனால், 2003-ம் ஆண்டு தொடங்கி 2013-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் அவர் எவ்வளவோ முயற்சித்தும் பணிகள் நகரவில்லை.


தமிழக மக்களின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க இந்த வட இந்தியர் போராடினார்.  ஆனால்  இந்த சீக்கிய செம்மலின் கோரிக்கையை கண்டு கொள்ளவே இல்லை. 


இன்னொரு பக்கம் கடலூர் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டது .


பொறுத்து, பொறுத்துப் பார்த்த ககன்தீப் சிங், வெறுத்துப் போய் கடலூர் மாவட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி. மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினார். 


ஆனால் அது எல்லாம் தமிழக செய்தி பத்திரிகை , தொலை காட்சிகளிலே வரவே இல்லை வரவும் வராது. 


வெறும் மூவாயிரம் உறுப்பினர்கள் உள்ள தென் இந்திய நடிகர் சங்க பிரச்சனை தான் 7 கோடி மக்களுக்கும் தேவை பாருங்க. 


ஏரிப் பகுதியை ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகம் ரூ.13.72 கோடிக்கு திட்ட மதிப்பீட்டை தயார் செய்தது. 


நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு முழுப் பணத்தையும் ஒதுக்கீடு செய்வதாக சம்மதம் தெரிவித்தது என்.எல்.சி நிர்வாகம்.


பணி தொடங்கியது


ஒருவழியாக 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி ஏரியை தோண்டும் பணிகள் தொடங்கின. பணியை முன்னின்று செய்தவர் திட்டப் பொறியாளர்  துரைக்கண்ணு.


1664 ஏக்கர் பப்ரபளவு உள்ள அந்த ஏரியை மீட்க, 12 கால்வாய்களை தூர் வார வேண்டும். அது தான் மிகவும் சவாலான செயலாக இருந்தது. 


துரைகண்ணு அவர்கள் தி ஹிந்துவுக்கு கொடுத்த பேட்டியில் : 


கால்வாய்கள் தூர் வாரும் பணி, மொத்தம் 12 கால்வாய்கள். ராஜன் கால்வாய் தண்ணீரும், சுரங்கத்தில் இருந்து வெளியேற்றுகிற நிலத்தடி தண்ணீரும் அந்தக் கால்வாய்களில் விவசாயத்துக்காக போய்க் கொண்டிருந்தது. 


12 கால்வாய்களையும் தூர் வார ஒரு வருஷமாகும். வேலையைத் தொடங்கினால் ஒரு வருஷத்துக்கு விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காது. 


சுமார் 15 கிராமங்கள். எல்லோரும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறு விவசாயிகள். 


ஒரு வருஷம் விளைச்சல் இல்லைன்னா அவங்க வயித்துப்பாடு என்னாகுமோன்னு கலக்கமாக இருந்தது. 


ஒரு நாள் ஊர் கூட்டத்தை கூட்டி இதை தயக்கத்தோட விவசாயிகள்கிட்ட சொன்னோம்.


 ஆனால், நாங்களே எதிர்பார்க்காத மாதிரி, 


"ஊர் நன்மைக்காக ரெண்டு வருஷம் கூட வயித்தைக் காயப்போட நாங்க தயார்”னு சொன்னாங்க. 


எங்களுக்கு கண்ணீர் வந்துடுச்சி. கலெக்டரும் கண் கலங்கிட்டாரு. 


எங்களுக்கு அதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேகம் தொத்திக்கிச்சு. 


கூலி தொழிலாளர்கள் தொடங்கி இன்ஜினியருங்க வரைக்கும் பல நாட்கள் யாரும் வீட்டுக்கே போகலை.


 ஏரிக்கரையிலேயே கொட்டகையை போட்டு அங்கேயே தங்கினோம். அங்கேயே சாப்பிட்டோம். ராப்பகல் பார்க்காம பேய் மாதிரி வேலை நடந்தது. 


ஒரு வருஷம்ன்னு நிர்ணயிச்ச வேலையை நாலே மாசத்துல முடிச்சோம்.


பின்னர் பழைய 15 கதவுகளை பெயர்த்து. புதிய கதவுகளை பொருத்தி. அந்த ஏரியை ஒட்டி 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு கரையை அமைத்தனர். 


அந்த கரையிலே. வனத்துறையினர். 40 ஆயிரம் தேக்கு மரக்கன்றுகளை நட்டனர். 


கடலூர் மாவட்ட விவசாயி திரு எஸ் ராமானுஜம் அவர்கள், சிறு வயதில் நான் நீந்தி விளையாடிய ஏரி இது. இதை இறப்பதற்கு முன் நான் பார்ப்பேன் என்று கற்பனை கூட செய்து பார்த்ததில்லை என்று ஆனந்த கண்ணீரோடு சொன்னார். 


இப்போது இந்த ஏரி கடல் போல காட்சியளிக்கிறது. 


இதனால், எங்கள் பகுதியில் 12,000 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.


 12,000 ஏக்கர் முழுவதும் சம்பா பயிரிடப்பட்டு பயிர்கள் நல்ல நிலையில் காட்சியளிக்கின்றன. என்கிறார் விவசாயி ராமானுஜம். 


திட்டத்துக்கு வித்திட்ட ககன்தீப் சிங் பேடி தற்போது தமிழக அரசின் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைச் செயலாளராக இருக்கிறார். 


அவரிடம் பேசினோம். “எல்லா பெருமையும் விவசாயிகளையும், என்.எல்.சி. நிர்வாகத்தையுமே சேரும் என்றார். 


தமிழகத்தில் பல்வேறு ஏரிகள் அழிந்துவருகின்றன. 


அரசை மட்டுமே நம்பாமல் லாபத்தில் இயங்கும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியை நீர் நிலைகளை மீட்க செலவிட வேண்டும் என்றார்.            

கடந்த 30 ஆண்டுகளில் 12456 ஏரிகளும், 27000 குளங்களும்  அழிந்திருக்கின்றன. 


மக்களுக்கு நல்லது செய்பவர்கள் தான் நமது மண்ணை ஆள வேண்டும். அத்தகையவர்கள் ககன்தீப் சிங் போன்ற வட இந்தியராகவும் இருக்கலாம். 


பென்னி குயிக் போன்ற வெளி நாட்டுக்காரராகவும் இருக்கலாம். 


மக்களுக்கு நன்மை செய்பவர்கள் செவ்வாய் கிரக வாசிகளாக இருந்தாலும் அவர்கள் எனது பங்காளிகளே. 


சினிமாக்காரர்கள் என்றால் என்னமோ தேவதூதர்கள் என்று நினைத்து அவர்களுக்கு கூஜா தூக்குவதை விட்டுவிட்டு  இந்த சீக்கிய செம்மலுக்கு ஒரு நன்றி சொல்வார்களா நம் மக்கள்?  


ஓசியில் எதைக் கொடுத்தாலும் நமக்குத் தேவையோ இல்லையோ ஓடிப் போய் வாங்கி பரணில் வைக்கும் மக்கள் நம் வாழ்வாதாரத்துக்கு எது தேவை என்று யோசித்து அதைக் கொடுப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

கண் பார்வை இல்லாதவர்களுடன் ஒரு அனுபவம்

பார்வையற்றவர்களுடன் 


சிங்கப்பூரில்,… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்,...


எங்களுக்கு சப்ளை செய்யும் பன்னாட்டு நிறுவனம் ஒன்று, பார்வையற்றவர்களுக்கு தொண்டு செய்யும் ஒரு நிறுவனத்துக்கு நிதி திரட்ட, ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஒரு வெள்ளிக்கிழமை நடக்க இருந்த அந்நிகழ்ச்சிக்கு, எனக்கும் அழைப்பு வந்திருந்தது.


அது ஒரு வாரக் கடைசி என்பதால், போகாமல் தட்டிக் கழிக்கவே முதலில் தோன்றியது! காரணம், நிச்சயம் அது உப்புச்சப்பில்லாமல், போர் அடிக்கும் என்ற எண்ணம் தான்.! அந்த வாரக் கடைசியை வேறு மாதிரி, ரிலாக்ஸ் செய்யலாமே, என்று தோன்றியது.


ஆனால், சிங்கப்பூரில் தனியாக வாழ்வதில், சிக்கலும் உண்டு.! நேரத்தை செலவு செய்ய என்ன செய்வது, என்று புரியாமல் போகும்! அந்தக் காரணத்தாலும், எல்லாவற்றுக்கும் செலவாகும் ஊரில்,.. அந்த நிகழ்ச்சிக்கு கட்டணம் எதுவும் இல்லை என்பதாலும், அழைப்பை ஏற்று, ஆன்லைனில் என் வருகையை உறுதி செய்தேன். கொஞ்சம் பொழுது போகும். கொஞ்சம் புது மனிதர்களையும் பார்க்கலாம்.! 


பல்வேறு துறைகளிலிருந்து, சுமார் 40 பேர் வந்திருந்தார்கள். சில இந்தியர்களும் கூட! தன்னிச்சையான ஒட்டுதலுடன், சிங்கப்பூரில் வாழ்க்கை பற்றி, அவர்களுடன் பேச்சுக் கொடுத்தேன்!


நிகழ்ச்சியில்,... முதலில், சிங்கப்பூரில், பார்வையற்றவர்களின் வாழ்க்கை பற்றிய ஒரு வீடியோ காண்பித்தார்கள். ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு எப்படி உதவி, அவர்களை வாழ்க்கையை நிறைவானதாக ஆக்க முயல்கிறார்கள் என்பது பற்றி! அது ஒரு ஊக்கமும், எழுச்சியும் ஊட்டும்15 நிமிட, கண்திறப்புக் குறும்படம். அதில், பார்வை சரியாக உள்ள சாதாரணமானவர்களும், இந்தப் பார்வை அற்றவர்களுக்கு, எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல், எப்படியெல்லாம் தங்களால் ஆனதை செய்து, அவர்கள் வாழ்க்கையை இயல்பானதாக ஆக்க உதவுகிறார்கள் என்று, அழகாய் விவரித்திருந்தார்கள். பார்வையற்றவருக்கு உதவுவதில் கிடைக்கும் நிறைவையும்,  திருப்தியையும், வெளிச்சமிட்டுக் காட்டினார்கள்!


அந்த வீடியோ முடிந்தவுடன், ஒரு ஹாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நிகழ்ச்சியின் அடுத்த பகுதி பற்றி விளக்கினார்கள்.


அந்தப் பகுதியின் தீம் : "முழு இருட்டில் உணவு உண்பது!"

இந்தப் பதிவு,... இதைப் பற்றியது தான்.


நாங்கள் 40 பேரும், எங்கள் விரல்களைக் கூட எங்கள் கண்ணால் பார்க்க முடியாத அளவு, கும்மிருட்டான அறையில், எங்கள் இரவு உணவு உண்ணப் போகிறோம்! அடுத்து, வரிசையாக என்னென்ன நடக்கப் போகிறது என்பதை, தெளிவாக விளக்கினார்கள்!


அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு, அந்த இருட்டு அறையில் எங்கள் நாற்பது பேருக்கும், முறையாக உணவு பரிமாறி, எங்களை விருந்துபசாரம் செய்யப் போவது,...


மூன்று, பார்வையற்றவர்கள் குழு!


ஒரு பார்வையற்ற பெண், இந்த வாலண்டீயர் குழுவின் தலைவி. அவருக்கு உதவியாக இரண்டு பார்வையற்ற ஆண்கள்.!


அந்தத் தலைவி, எங்களுக்கு இருட்டில் உணவு உண்பது எப்படி, என்பது பற்றி சிறு குறிப்புக்கள் தந்தார். (பார்வையற்றவர்கள் உலகத்தில் வழக்கமாக பின்பற்றப்படும் "விதி"கள் அவை!).    


1) உங்கள் சாப்பாட்டு மேஜையில் பின்வரும் வகையில் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்: 


நடுவில் நேரெதிரில் இருக்கும் சாப்பாட்டு தட்டுக்கு,... 

(கடிகாரத்தின் சிறிய முள்) 

-- 3-மணி (காட்டும்) திசையில்,.. ஒரு ஸ்பூன்!

-- 9-மணி திசையில், ஒரு முள்கரண்டி!

-- 12-மணி திசையில், இன்னொரு ஸ்பூன்!

-- 2-மணி திசையில், காலி கண்ணாடி டம்ளர்!

-- 6-மணி திசையில், மடித்த பேப்பர் டவல்!


2) இரண்டு பெரிய ஜக் (கூஜா) கள், எல்லா மேஜைகளுக்கும், சுற்றில் வரும்.  அவைகளில், பாத்திர வெளிப்பரப்பு டிசைன் எதுவும் இல்லாமல் வழுவழுவென்றிருப்பதில் குடிநீரும்,.. பாத்திர வெளிப்பரப்பு நெளிநெளியாய் இருப்பதில், ஆரஞ்சு ஜூஸும் இருக்கும்.!


3) அந்த கூஜாக்கள் உங்களிடம் வரும் பொழுது, உங்கள் கிளாஸ் டம்ளரில், நிறையும் அளவு தெரிய, உங்கள் ஆட்காட்டி விரலை உள்ளே நுழைத்து, நீரோ அல்லது  ஜூஸோ, உங்கள் விரல்முனையை தொடும் வரை விட்டுக் கொள்ள வேண்டும்! (அளவாக டம்ளரில் விட, இதுதான் வழி!)


டீம் லீடர் பெண் கேட்டார்: "எல்லாருக்கும் புரிந்ததா?"

எல்லோரும் புரிந்தது என்று மரியாதைக்கு சொல்லி விட்டு, குழப்பம் தீர, அவசரம் அவசரமாக, பக்கத்தில் இருந்தவரிடம் சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தோம்!


அடுத்த ஒன்றரை மணி நேரம்,... அந்தக் கும்மிருட்டில், 

எங்களுக்கு கண்-திறப்பு நிகழ்ந்தது!


நாங்கள் நாற்பது பேரும், சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவும் ஒரு பார்வையற்றவரால், அந்த கும்மிருட்டு ஹாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஒவ்வொருவரும், (ஒரு குழுவுக்கு-ஒரு மேஜை) மேஜையைச் சுற்றி இருந்த ஒரு நாற்காலியில் அமர்த்தப்பட்டோம்! 


அப்பொழுது,… எங்களுக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்த விஷயம் இருட்டு அல்ல,... எங்கள் மனத்தில் தோன்றிய, "நாங்கள் தானே உங்களுக்கு இதுபோல் சாதாரணமாக உதவி செய்வோம்,... இப்போது,..!" என்ற எண்ணம் மட்டுமே!


எல்லோரும் அவரவர் மேஜையில்/இருக்கையில் அமர்ந்த பின்னர், அந்தப் பார்வையற்ற மூவர்-குழுவால், எங்களுக்கு five-course டின்னர் பரிமாறப்பட்டது - வெல்கம் ட்ரிங்க், அப்பிடைஸர், ஸ்டார்ட்டர்கள், மெயின் கோர்ஸ், மற்றும் டெஸெர்ட் கள் !!!!!


இந்தப் பார்வையற்ற மூவர் குழுவின் பரிமாறலில், எங்களை மிகவும் பிரமிப்பூட்டிய விஷயம் என்ன தெரியுமா?


நாங்கள் ஆன்லைனில் ரெஜிஸ்டர் செய்யும் பொழுது, சைவமா அசைவமா என்று குறிப்பிடச் சொல்லி, கேட்கப்பட்டது! நான் இயற்கையாக சுத்த  சைவம் என்பதால், அதை தேர்ந்தெடுத்திருந்தேன்!


எங்கள் நாற்பது பேரில் இருந்த ஒரு சில சைவ-உணவு உண்பவர்கள் தாறுமாறாக, வெவ்வேறு மேஜைகளில்/இருக்கைகளில் அமர்ந்திருந்தாலும்,... சற்றும் தவறாமல், மிகச் சரியாக, அவர்களுக்கு மட்டும், சுத்த சைவ உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது தான்! 


அதைவிட பிரமிப்பு,... எங்கள் தட்டு காலியாக ஆக,... சரியாக ஒருவர் வந்து, அடுத்து என்ன உணவு வேண்டும் என்பதைக் கேட்டு, தட்டில் தேவையான அளவு நிரப்பி விட்டுச் சென்றார்! நாங்கள் கொஞ்சம் கூட அடுத்த வாய் உணவுக்காக, காத்திருக்க வேண்டிய அவசியமே வரவில்லை!


கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் கழித்து,.. எங்களுக்கு முழு திருப்தியுடன், வயிறு நிரம்ப உண்டு விட்டோமா என்று, பரிமாறல்-குழுவின் தலைவி கேட்டு, அதை, உறுதி செய்து கொண்டவுடன்,...


அறையின், விளக்குகளை ஆன் செய்தார்!


நாற்பதில், ஒருவர் தவறாமல்,கண்ணில் நீருடன், அந்த அறையை விட்டு வெளியே வந்தோம்!


வயிறு நிறைந்தது.! கண் திறந்தது!


இருவிழிகளில் பார்வையைப் பெற்று, இந்த அழகான உலகைக் காணும் பாக்கியம் பெற்ற நாம், எவ்வளவு அதிருஷ்டம் செய்தவர்கள்,...


என்பதை உணர்ந்தோம்!


அதைவிட முக்கியமாக,... பார்வை இல்லாமல் வாழ்வோரின் வாழ்க்கை, எவ்வளவு சிரமமானது எனும் கண்திறப்பு, எங்கள் மரபணுவில் பதிந்தது! வெறும் இரண்டு மணி நேரம் இருட்டில் இருக்கவே இவ்வளவு சிரமம் என்றால், வாழ்நாள் முழுவதும், அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய கஷ்டங்கள், சிக்கல்கள், எவ்வளவு இருக்கும், என்று சுலபமாக உணர முடிந்தது!


எங்களுக்கு இயற்கையாக அமையப் பெற்ற பல அதிர்ஷ்டமான விஷயங்களின் அருமையை உணராமல், இன்னமும் இது வேண்டும், அது வேண்டும், என்று அற்ப விஷயங்களுக்காக தேடி, ஓடி, நொந்து, அழுது, விரக்தியுடன் வாழும் வாழ்வின் விசித்திரத்தை,... புரிந்து கொண்டோம்!


உள்ளவைகளுக்கு நன்றியுடன் இல்லாமல், 

இல்லாதவைகளுக்கு குறை சொல்லும் 

நன்றி கெட்டத்தனத்தை வெட்கத்துடன் மனதில் பதித்தோம்!!


புது மனிதராக, வாழ்வின் புதுப்பாதையின் ஆரம்பத்தில், 

எங்களைக் கொண்டு நிறுத்தி விட்டுச் சென்றனர், அந்த மூவர்!


சந்தோஷமாக வாழுங்கள்! 

சந்தோஷப்பட உங்கள் வாழ்வில் நிறைய இருக்கிறது!


நன்றியுடன் இருங்கள்! 

இப்பிறவியை நன்றியுடன் நினைக்க,

நிறைய விஷயங்கள் உள்ளது!


எனக்கு, கண்திறப்பு நிகழ, சிங்கப்பூரில் ஒரு கும்மிருட்டில், இரவு உணவு தேவைப்பட்டது! 


உங்களுக்கு,

இந்தப் பதிவே கூட

போதுமானதாக இருந்தால்...


என் அனுபவம், அர்த்தமுள்ளதாக ஆகியிருக்கும்!

(படித்ததில் பிடித்தது)

ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீராமானுஜர் பூத உடல்

ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீராமானுஜர்  பூத உடல் கெடாமல் பாதுகாக்கப்பட்டு வழிபாடு செய்து வருகிறார்கள், இந்த பூத உடலுக்கு வருடத்திற்கு இரண்டு முறை பச்ச கற்பூரமும் குங்குமப்பூவும் கொண்டு அபிசேகம் செய்து வருகிறார்கள் 


இந்த செய்தி அருகில்  திருச்சியில் உள்ள இந்துக்களுக்கே தெரியாது. ..


ஸ்ரீராமனுஜர் சன்னதி ஸ்ரீரங்கம் கோவிலில் இருப்பதே பலருக்கும் தெரியவில்லை 


அப்படியே ஸ்ரீராமனுஜர் சன்னதியை பார்ப்பவர்கள் 

ஸ்ரீராமானுஜர் பூத உடல் என்று அறிவது இல்லை, சன்னதியில் உள்ளது கருங்கல் சிலை என்றே பலர் நினைத்து போகிறார்கள்


தானான திருமேனி (இராமனுசர் பூதஉடல்) இராமானுசர் ஸ்ரீரங்கத்தில் பரமபதம் அடைந்தவுடன், அரங்கனுடைய வசந்த மண்டபத்திலேயே அவருடைய திருமேனியை (பூத உடலை) பிரதிஷ்டை செய்தார்கள்.


இராமானுசர் தமது 120 ஆவது வயதில் (கி.பி. 1137), தாம் பிறந்த அதே பிங்கள வருடம் மாசி மாதம் வளர்பிறை தசமி திதியில், சனிக்கிழமை நண்பகலில், ஜீயர் மடத்தில் மரணம் (பகவத் சாயுஜ்யம்) அடைந்தார். அவருடைய சீடர்களான கந்தாடையாண்டான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், எம்பார், வடுகநம்பி முதலானோர் வேரறுந்த மரம் போல் விழுந்து கிடந்து துடித்தனர். உயிர் பிரிந்த உடனே:


தர்மோ நஷ்ட (தர்மத்திற்கே பெருத்த நஷ்டம்) என்று அசரீரி ஒலித்ததாம். அப்போது நடந்த நிகழ்வுகள் எல்லாம் அதிசயத்திலும் அதிசயமானது என்கிறார்கள்.


நம்பெருமாள் என்னும் அரங்கன் தான் உடுத்திக் களைந்த பீதகவாடையையும், சூடிக்களைந்த துழாய் மலரினையும், எண்ணெய்க் கிண்ணத்தையும் தம் இறுதி மரியாதையாக ஒரு பொற்கிண்ணத்தில் இட்டு உத்தம நம்பி என்ற சீடர் மூலம் ஜீயர் மடத்திற்கு அனுப்பினாராம். உத்தம நம்பிகள் ஜீயர் மடத்தில் இருந்த சீடர்களுக்கு ஆறுதல் சொல்லி அதன் பிறகு எண்ணெயை இராமானுசரின் திருமுடியில் தேய்த்துப் பின் அவர் திருவுடலை நீராட்டி, அரங்கன் உடுத்திக் களைந்த பீதகவாடையையும் சூடிக்களைந்த தொடுத்த துழாய் மலரினையும் திருமேனியில் சாற்றினாராம். பின்பு எண்ணெய் மற்றும் ஸ்ரீ சூர்ணங்களும் பிரசாதமாக அங்கிருந்தோருக்கு வழங்கப்பட்டதாம். இதை வைணவ மொழியில் பிரம்மமேத ஸம்ஸ்காரம் என்கிறார்கள்.


இதன் பின்பு இராமானுசரின் திருமேனி ஒரு வாகனத்தில் (திவ்ய விமானத்தில்) அமர்த்தப்பட்டு இதன் முன்னின்று அவருடைய முக்கிய சீடர்களும் ஜீயர்களும் பரஹ்மவல்லி, ப்ருகுவல்லி, நாராயணானுவாகம் போன்ற மந்திரங்களை ஓதினராம். பல்லாயிரக்கணக்கான வைணவ சீடர்கள், வைணவப் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் புடை சூழ இராமானுசர் திருமேனி தாங்கிய வாகனம் இறுதிப்பயண ஊர்வலத்தைத் தொடங்கியது. திருவரங்கப் பெருமாளரையர் தலைமை தாங்கி திருவாய்மொழியரையர், ஆப்பான், திருவழுந்தூரரையர், திருநறையூரரையர், அழகிய மணவாரரையர் முதலிய எழுநூறு திருவாய்மொழி ஓதும் அரையர்கள் திருவாய்மொழியினை ஓதியபடி பின் தொடர்ந்தனர். தொடர்ந்து இராமானுஜ நூற்றந்தாதி ஓதியபடி திருவரங்கத்து அமுதனார், பெரியகோவில் வள்ளலார் முதலியவர்கள் வாகனத்தின் பின் வந்தனர்.


ஸ்ரீரங்கத்தில் ஜீயர் மடத்திலிருந்து நகரின் நான்கு உத்திர வீதி, சித்திரை வீதிகளிலும் வாகனம் ஊர்ந்தது. மக்கள் கூட்டம் வீதியெங்கும் நிரம்பி வழிந்தது. பெண்கள் தங்கள் வீதிகளில் நீர் தெளித்துக் கோலமிட்டுக் கூடி நின்றனர். மக்கள் பூவும் பொரியும் கலந்து தூவினார்களாம். அரங்கன் கோவில் திருநடை மூடி, கரும்பும் குடமும் ஏந்தினராம். அடியார்கள் சாமரம் வீச, வானில் கருடன் வட்டமிட இராமானுசர் இறுதி ஊர்வலம் திரும்ப கோவில் வாயிலை அடைந்தபோது:


தர்ஸனத்தில் எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்று அசரீரி மீண்டும் ஒலித்ததாம்.


தொடர்ந்து அரங்கன்:

இராமானுசன் என்தன் மாநிதி

என்றும் இராமனுசன் என்தன் சேமவைப்பு என்றும் திருவாய் மலர்ந்தருளினாராம். எனவே இராமனுசரின் பூத உடல் என்ற அந்த நிதி வெளியே எங்கும் போகலாகாது என்று அரங்கன் தன் திருக்கோவில் வளாகத்திலேயே (ஆவரணத்துக்குள்ளேயே) எவ்வாறு ஒரு அரசன் தன் பெண்டிரை தன் அந்தபுரத்திலே அடக்கி வைப்பானோ அதுபோல தன்னுடைய சன்னதிக்குள்ளேயே, (யதி ஸம்ஸ்காரவிதியின் படி), பள்ளிப்படுத்தினர்.


பல வருடங்களுக்கு முன் வைணவ மரபில், துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது. மாறாக அவர்களை திருப்பள்ளிப் படுத்துவார்கள் (புதைத்தல்). இராமானுசரின் பூதவுடலை ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் (முன்னாள் வசந்த மண்டபம் என்றழைக்கப்பட்ட இடத்தில்) திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னிதி. இன்றும் நாம் இவருடைய பூத உடலை தரிசிக்கலாம் இவரின் திருமேனியில் தலைமுடி கைநகம் போன்றவற்றைக் கூட எளிதாகக் காண இயலும். ஸ்ரீரங்கத்தில் இராமானுசரின் சன்னதியில் எழுந்தருளியுள்ள திருமேனிக்கு தானான திருமேனி.என்று பெயர்.


உய்ய ஒரே வழி....

உடையவர் திருவடி....

இந்திய வங்கிகளில் கொள்ளை அடித்து விட்டு நாட்டை விட்டு ஓடி போனவர்களின் பட்டியல்

 1. விஜய் மல்லையா

2. மஹுல் சோக்ஸி

3. நீரிவ் மோடி

4. நிஷாந்தா மோடி

5. புஷ்பேஷ் பைத்யா

6. ஆஷிஸ் ஜோபன்புத்ரா.

7. சன்னி கல்ரா

8. ஆரத்தி கலரா

9. சஞ்சய் கல்ரா

10. வர்ஷா கல்ரா

11. சுதீர் கல்ரா

12. ஜடின் மேத்தா

13. உமேஷ் பரிக்

14. கமலேஷ் பரிக்

15. நிலேஷ் பரிக்

16. வினய் மிட்டல்

17. ஒருமை கர்கா

18. சேதன் ஜெயந்திலால்

19. நிதின் ஜெயந்திலால்

20. தீப்திபேன் சேதன்

21. சவியா சேதா

22. ராஜீவ் கோயல்

23. அல்கா கோயல்

24. லலித் மோடி

25. ரித்தேஷ் ஜெயின்

26. ஹிடேஷ் நாகேந்திரபாய் படேல்

27. மயூரிபெஹன் படேல்

28. ஆஷிஸ் சுரேஷ்பாய்.

       

கொள்ளை மொத்தம்: 10,000,000,000,000 / - (பத்து டிரில்லியன் ரூபாய்)


சிறப்பு உண்மைகள்:


இந்த 28 பேரில்

~ யாரும் ஆர்.எஸ்.எஸ் இல்லை.


 யாரும் பஜ்ரங் தளம் இல்லை. 


யாரும் ஸ்ரீராம சேனா இல்லை.     


 யாரும் இந்து விஜிலென்ஸ் மன்றம் இல்லை.


அவர்கள் யாரும் பாஜக இல்லை


 அவர்கள் யாரும் விஷ்வ ஹிந்து பரிஷத் இல்லை 


இந்த விஷயத்தை அனைவரிடமும் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்:


 மற்றொரு விஷயம். 2014 மே 1 முதல் அவர்கள் எந்த வங்கியிடமிருந்தும் கடன் வாங்கவில்லை.  2004-2014 வங்கி கொள்ளை காலம். 

பிரதிஷ்டைக்குப்பின் கற்சிற்பம் கடவுளாவது எப்படி?

 கல்லை வணங்குகிறார்கள் என்று கேலியும் கிண்டலும் செய்யும் அனைவருக்கும்  இது சமர்ப்பணம்!!!!

ஆகம சாஸ்திரத்தின் அற்புதம்


கருங்கல் ஒன்று சிற்பமாவது சாதாரண விஷயமல்ல. 


கல்லை தேர்ந்தெடுப்பதில் தொடங்கி, கற் சிற்பம் உருவாவது வரை ஏகப்பட்ட சாஸ்திரங்களை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள். 


சிலைக்கே ஏகப்பட்ட விதிகள் என்றால், வழிபடக்கூடிய மூலவராக உருவாகும் கற் சிற்பம் வடித்தவுடன் அப்படியே கொண்டு போய் பிரதிஷ்டை செய்து விட முடியாது. 


அறிவியலும் ஆன்மிகமும் பின்னிப்பிணைந்த பல வழிமுறைகளை கடைப்பிடித்து சிலைக்கு கடவுள் கடாட்சத்தை ஏற்றுகிறார்கள். 


கல் ஒன்று கடவுளாக மாறும் வழிமுறையைதான் இங்கு காணவிருக்கிறோம்.


சிலைகளை ஸ்தாபிக்கும் அந்த தெய்வீக வழிமுறைகளைப் பற்றி கீர்த்திவர்மன் ஸ்தபதி அவர்கள் கூறும்போது "சிற்ப சாஸ்திரம், ஆகம விதிகளின்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதலில் சுத்தம் செய்யப்பட்டு, ஒரு நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படுகிறது. 


அதாவது 3 புண்ணிய நதிகளின் நீரையும், முக்கிய தீர்த்தங்களின் நீரையும், கடவுள் சிலை எந்த தலத்தில் வைக்கப்பட போகிறதோ அந்த தீர்த்தத்தையும் சேர்த்து, புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் அமிழ்த்தி வைக்க வேண்டும். 


ஜலவாசத்தில் இருக்கும் சிலை குளிர்ந்து உறுதியாக உருவாகும். அறிவியல் படி ஜலவாசத்தில் 48 நாட்கள் இருக்கும் சிலையில் ஏதேனும் ஓட்டைகள், மெல்லிய பிளவுகள் இருந்தால் நீர் அதனுள் நுழைந்து விடும். நுழையும் நீர் குமிழிகளை வெளியே விடும். 


இதனால் அந்த சிலை பின்னமான சிலை என்றும், அது வழிபடத்தக்கது அல்ல என்றும் கண்டுபிடித்து விடலாம். 


இதனால் குறைபட்ட சிலையை வணங்கும் குற்றம் தடுக்கப்படுகிறது. குறைவுபட்ட சிலையை பிரதிஷ்டை செய்வது என்பது அந்த ஊருக்கும், மக்களுக்கும் பெரும் கேட்டை உருவாக்கி விடும். 


அதை ஆரம்ப நிலையிலேயே தடுத்து விடும் வழிமுறை தான் ஜலவாசம்.


48 நாள்கள் நீரில் ஊறிய சிலையை எடுத்து அடுத்ததாக தான்ய வாசத்தில் வைக்கிறார்கள். 


அதாவது சிலை மூழ்கும் அளவுக்கு நவ தானியங்களை கொட்டி வைக்கிறார்கள். இதுவே தான்ய வாசம். 


இதுவும் 48 நாட்கள் தான். நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் யாவும் சேர்த்தே இந்த வாசம் நடத்தப்படுகிறது. ஏன் நவரத்தினங்கள், பொற்காசுகள் என்றால் மன்னராட்சியின் போது உருவாக்கப்பட்ட சிலைகள் மொத்தம் ஆறு வாசத்தில் இருக்க வைக்கப்பட்டதாம். 


ஜலவாசம், தான்ய வாசம், பின்னர் நவரத்தினங்களில் மூழ்க வைக்கும் ரத்ன வாசம். 


பின்னர் பொற்காசுகளில் மூழ்க வைக்கும் தன வாசம். பின்னர் வஸ்திர வாசம், அதில் பட்டாடைகளில் அந்த கடவுள் சிலை வாசம் செய்யும். 


இறுதியாக சயன வாசத்தில் கடவுள் சிலை வைக்கப்படும். அதாவது ஹம்சதூளிகா மஞ்சம் எனப்படும் அன்னத்தின் சிறகுகளால் ஆன படுக்கையில் மான் தோல் விரித்து அதன் மீது கடவுள் சிலை வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். 


இந்த ஆறு வாசமும் 48 நாட்களாக மொத்தம் 288 நாட்கள் வைக்கப்படும். இப்போது ரத்தினங்கள், பொற்காசுகள், புலித்தோல் எல்லாம் சாத்தியமில்லை என்பதால் ஜலவாசம், தான்ய வாசத்தோடு முடித்துக்கொள்ளப்படுகிறது. 


எனினும் தான்ய வாசத்தில் நவதானியத்தோடு பொற்காசுகளும், நவரத்தினமும் இயன்ற அளவு சேர்க்கப்படுகிறது.


சரி... ஏன் இந்த தான்ய வாசம் என்று தானே கேட்கிறீர்கள். நீரில் ஊறி ஏதாவது ஓட்டை, விரிசல் இருந்தால் காட்டும் ஜலவாசம் தாண்டியும் ஏதேனும் குற்றம் குறை சிலையில் இருந்தால் அதை தான்ய வாசம் சுட்டிக்காட்டி விடும். 


நவதானியத்தில் இருந்து வெளியாகும் வெவ்வேறு விதமான வெப்பம் சிலையை தாக்கும். 48 நாட்கள் இந்த வெப்பத்தில் இருக்கும் சிலையில் ஏதேனும் வலிமையற்ற பகுதிகள் இருந்தால் அவை உடைந்து விடும். 


தேரை போன்ற பாதிப்பு கொண்ட சிலை என்றால் இந்த வாசத்தில் உடைந்து சிலையின் குற்றத்தை காட்டிக்கொடுத்து விடும். 


அதாவது ஜலவாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குற்றம் குறைகள் தெரிந்து விடும். அதைப்போல தான் ரத்தின வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெரும். 


அதுபோலவே தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெற்று விளங்கும். 


6 மண்டல வாசமும் முடிந்து தயாராகும் தெய்வ சிலைகளின் கண்கள்,  பிரதிஷ்டை செய்யப்போகும் இரண்டு நாளுக்கு முன்னர் தான் திறக்கப்படும்..." என்றார். 


தெய்வ சிலைகளை பிரதிஷ்டை செய்யும் முறையைப்பற்றி சுந்தரேச சர்மா சிவாச்சாரியார் அவர்கள் கூறும்போது "இன்றும் தெய்வ சிலைகள் வடிக்கப்பட்டப்பின்னர் அவை ஒரு நாளில் ஜலவாசம், தான்யவாசம் எனும் அறிவியல் முறையிலான ஐதீகப்படி வைத்து குளிர், உஷ்ணம் இவற்றால் பாதிக்கப்படாத நிலையை சிலைகளுக்கு கொண்டு வருவார்கள். 


இதனால் அப்பழுக்கு இல்லாத முழுமையான சிலை உருவாகிறது. அதன்பிறகு, 7 நாட்கள் வரை புஷ்பாதி வாசத்தில் சிலையை வைக்கிறார்கள். 


பல்வேறு விதமான நறுமண மலர்களில் சிலை இருக்கும்போது, அந்த சிலைக்கு வாசம் மட்டுமில்லாது மலர்களின் சத்தும் ஊறி, அந்த சிலைகள் மூலிகைச் சத்தினை பெறுகிறது. 


புஷ்பாதி வாசத்துக்கு பிறகு கண்களை திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக அந்த தெய்வ சிலை சயனாதி வாசத்தில் வைக்கப்படுகிறது. நல்ல மஞ்சத்தில், தலையணை உள்ளிட்ட வசதிகளோடு கிழக்கே பார்த்து கடவுள் சிலையை வைத்து விடுகிறார்கள். 


இந்த வாசத்தில் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படுகிறது. இத்தனைக்குப் பிறகுதான் கண் திறக்கும் புனித நிகழ்ச்சி நடக்கிறது. 


தகுந்த பூஜைக்கு பிறகு தலைமை ஸ்தபதியால் தங்க ஊசி கொண்டு கண்ணில் மெல்லிய கீறலால் கருவிழி திறக்கப்படுகிறது. 


அதன்பிறகே அந்த தெய்வசிலைக்கு முழுமையான அழகு வருகிறது. 


பின்னர் கும்பாபிஷகத்தின் போது தொடர்ந்து நடந்த யாகசாலை பூஜையின் போது வைக்கப்பட்ட புனித நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்களால் ஸ்வாமிக்கு தெய்வீக தன்மை ஊட்டப்படுகிறது. 


ஸ்பரிசவாதி என்னும் இந்த கடைசி வாசத்தில் ஸ்வாமியின் நவ துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு மின்காந்த சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்டு முழுமையான கடவுளாக மாற்றி அமைக்கப்படுகிறது. 


இந்த காரியத்தை கருவறையில் பிராதன ஆச்சாரியார் செய்து வைப்பார். கல்லில் இருந்து வடிக்கப்பட்ட சிலை இவ்வாறு பல்வேறு அறிவியல், ஆன்மிக வழிமுறைகளின்படி தான் அருள்மிக்க கடவுளாக மாறுகிறது" என்றார்.


கல்லை வடித்து பொதுவில் வைத்தால் அது சிலை. 


அதுவே இத்தனை இத்தனை புனித வழிகளால் மேம்படுத்தப்பட்டால் தான் அது நாம் வணங்கும் கடவுளாக மாறுகிறது. 


மனிதனும் அப்படித்தான், பல்வேறு பக்குவங்களை அடைந்தால் தான் அவனும் வணங்கத்தக்கவனாக மாறுவான் என்பதை தான் இந்த வழிமுறைகள் காட்டுகின்றன.

நன்றி,💐