உலகில் இன்றைய பெரும் பிரச்சனை over-consumption தான் என்கிறார்கள்.
இந்த over consumption நம்மிடமும் தலைகாட்ட ஆரம்பித்து விட்டது.
சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குச் சென்று பார்த்தால் என்னென்னவோ தயாரிப்புகள் கலர் கலராக, வகை வகையாக, வெவ்வேறு சைஸுகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும்.
இதை எல்லாம் கூட வாங்குவார்களா என்று யோசிப்போம்.
வாங்குவதால் தானே வைக்கிறார்கள்?
பிரியாணி மசாலா ஓகே, தக்காளி சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதத்துக்குக் கூட மசாலா வந்திருக்கிறது.
ஒன்றுக்கொன்று என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை.
'பூஜா kit' விலை 180 ரூபாய்!
உள்ளே ஒரு காட்டன் துணி, இரண்டு விளக்குத் திரி பாக்கெட், ஊதுபத்தி, கொஞ்சம் கற்பூரம், குட்டியூண்டு பாட்டிலில் பன்னீர், அவ்வளவு தான்
180 ரூபாய்!
தேவையற்ற பொருட்களை, தயாரிப்புகளை வாங்கிக் குவிக்கும் கலாச்சாரம்!
ஆணிகளை முதலில் விற்று விட்டுப் பிறகு சுத்தியலுக்கான தேவையை உருவாக்கும் யுக்தி!
தேவையே இல்லாவிட்டாலும் ஒருவித 'fake demand' ஐ உருவாக்குவதிலும் கார்ப்பரேட்கள் வல்லவர்கள்.
சமீபத்திய உதாரணம் vegetable wash!
250-300 ரூபாய்க்கு விற்கிறார்கள்.
இதை இதற்கு முன் நாம் கேள்விப்பட்டு இருப்போமோ!
எல்லா product களிலும் சகட்டு மேனிக்கு kills 99.9% germs என்று போட்டு விடுகிறார்கள்.
இந்த consumption எப்போதும் exponential ஆக இருக்கிறது.
64 வகை சோப்புகள், சூப்பர் மார்க்கெட்டில் கால்வாசி இடத்தை அடைத்துக் கொண்டு! எல்லா சோப்புகளும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்பது நமக்கு தெரிவதில்லை.
home-made என்று போட்டுவிடு, organic என்று எழுது, 100% hygienic என்று எழுது, good for liver என்று போடு,
ஏதோ ஒரு வைட்டமின் இருக்கிறது என்று அளந்து விடு, கவரில் பற்கள் தெரியச் சிரிக்கும் ஒரு happy family யின் படத்தைப் போட்டு விடு, அவ்வளவு தான், எல்லாம் விற்று விடும்!
தினமும் 3 GB டேட்டா இலவசம்.
வேறு என்ன செய்ய?
வீடியோக்கள் scroll செய்யச் செய்ய மேலெழும்பி வந்து கொண்டே இருக்கின்றன.
இரவு முழுவதும் பார்க்கலாம். காலையில் நம் cognitive data base அப்படியே தான் இருக்கும்.
எதையும் புதிதாகக் கற்றுக்கொண்டு இருக்க மாட்டோம். எதுவும் நம்மை மாற்றி இருக்காது.
'Stop making stupid people famous' என்று சொல்வார்கள்.
அரைவேக்காடுகளை, கத்துக்குட்டிகளை நாம் தான் பிரபலம் ஆக்குகிறோம்.
மில்லியன் subscribers, லட்சக்கணக்கில் followers!
வாங்குவோர் இல்லையென்றால் விற்பனை செய்வோர் இல்லை. பார்ப்போர் இல்லை என்றால் பிரபலங்கள் இல்லை.
data என்றில்லை, மின்சாரம், தண்ணீர், எரிபொருள் எல்லாமே over consumption தான்.
Buffet- ல் இலவசமாகக் கிடைக்கிறது என்று எல்லா அயிட்டங்களிலும் ஒன்றை எடுத்து உள்ளே தள்ளுகிறோம்.
விளைவு: வயிற்று வலி, இரண்டு நாள் வயிற்று உப்புசம், உபாதை!
இலவச மருத்துவம் என்பதற்காக நோயை வலிய வரவழைத்துக் கொள்ளவும் செய்வோம் நாம்!
மூன்றாவதாக நாம் வாழ்க்கையையும் over consume செய்கிறோம்.
'நாளை என்பது நிச்சயம் இல்லை, இன்றே அனுபவித்து விடு' என்பதெல்லாம் சரி தான்.
ஆனால் வாழ்க்கையில் நம் அனுபவங்களை, சுகங்களை, சந்தோஷங்களை சரி சமமாக distribute செய்கிறோமா?
40 வயதுக்குள்ளாகவே எல்லாவற்றையும் முடித்து விட்டு போதும்டா சாமி என்று exhaust ஆகி விடுகிறோம்.
8 வயது சிறுவன் 28 வயது இளைஞன் போலப் பேசுகிறான்.
'மஞ்சத்திலே கொஞ்சக் கொஞ்ச' என்று ஆறு வயது குழந்தை ஒன்று பாடுகிறது.
'expression பத்தலை' என்று ஜட்ஜுகள் (?!) தீர்ப்பு சொல்கிறார்கள்.
பத்து வயதில் காதலித்து, 20 இல் ஆன்மிகம் பேசி விட்டு, முப்பதில் முடித்து விட்டால் என்ன தான் செய்வது?
40-இல், 50-இல், 60-இல் வாழ்க்கை என்னும் காலிபாட்டிலை வைத்துக்கொண்டு எதை அனுபவிப்பது?
நாளைக்கென்று கொஞ்சம் மிச்சம் வைப்போம்.
நீரை, மின்சாரத்தை, கனிம வளங்களை, பெட்ரோலை நம் பேரப்பிள்ளைகளுக்கும் விட்டு வைப்போம் என்ற எண்ணம் நமக்கு வருவதே இல்லை.
அளவுக்கு மிஞ்சினால்.?
🫢
இதை இங்கு நான் பேசியதால் மட்டும் ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்து விடாதா !
🙄🙄🙄🤔🤔🤔🤔