சௌராட்டிர மொழி தமிழ் நாட்டின் சில பகுதிகளிற் பேசப்படும் ஒரு இந்திய-ஆரிய மொழியாகும். இதனைப் பேசுவோர் சௌராட்டிரர் எனப்படுகின்றனர். தமிழில் இவர்கள் பட்டுநூல்காரர் எனவும் அழைக்கப்படுவது உண்டு.
1997 ஆம் கணக்கீட்டின் படி தமிழ்நாட்டில் மொத்தம் 510,000 சௌராட்டிரர்கள் வாழ்கிறார்கள்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இம் மொழி பேசுவோர் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரப் பகுதியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இவர்கள் காந்தியடிகள் பிறந்த கத்தியவார் என்றழைக்கப்படும் சமூகத்தைச் சார்ந்தவர்கள் ஆவர்.
சமசுகிருதம் பேசுவது போன்ற ஒலி வடிவினை சௌரஷ்ட்ரீ மொழி பெற்று உள்ளது.
தற்போது இம் மொழி பேசுவோர் தமது இரண்டாம் மொழியாகத் தமிழையே கொண்டுள்ளனர். எல்லாவித நடைமுறைத் தேவைகளுக்கும் தமிழைப் பேசவும் எழுதவும் இவர்கள் வல்லவர்களாக உள்ளனர்.
புகழ் பெற்ற சில சௌராட்டிரர்கள்:
டி. எம். சௌந்தரராஜன், பாடகர்
எம். வி. வெங்கட்ராம், எழுத்தாளர்
முன்னாள் அமைச்சர் எசு.ஆர்.இராதா,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சி.எசு. ராம்பாபு,
முன்னாள் பா.ச.க. சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர். ராமசாமி,
திரைப்பட நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா.

No comments:
Post a Comment