அறிந்துகொள்வோம் சொந்தங்களை


இன்று ‪#‎ராமநாதபுரம்‬ மாவட்டம் பாண்டிய நாட்டின் இதயம் போன்றது. அங்குள்ள கமுதி கோட்டை சுந்தர பாண்டியனின் முக்கியமான கோட்டை.

இங்குள்ள பசும்பொன் என்ற ஊர் சங்க கால பாண்டிய மன்னன் பசும்பூண் பாண்டியன் பிறந்த ஊர் மற்றும் அவர் வழிவந்த பசும் பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த இடம் ஆகும்.

13ம் நூற்றாண்டுக்கு பின் பாண்டியர்கள் வீழ்ச்சியடைந்த பின் சேதுபதி மன்னர்கள் இராமநாதபுரத்தை ஆண்டனர். 15ம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சி வந்த பொழுது பாளையமாக இருந்தது. 1730களில் நாயக்கர் பலவீனமான போது சுதந்திர நாடாக ஆனது.

இது தவிர இங்கு ராமர் வந்து சிவனை வழிபட்டு இலங்கை செல்ல பாலம் கட்டியதாக நம்பப்படும் இராமேஸ்வரம். அங்குள்ள மிகப்பெரியகோவில் பாண்டியர்களின் கட்டடகலைக்கு சான்று.

பரமக்குடி மற்றும் அதன் அருகில் உள்ள ஏர்வாடி, கீழக்கரை, முதுகுளத்தூர், தனுஷ் கோடி போன்றவையும் பெயர் பெற்றவை.

அடுத்து வரும் நாட்களில் சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் பற்றியும் பார்க்கலாம்.

உங்கள் வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் காலாவதியாகும் தேதி(Expiry date) தெரியுமா..?


உங்கள் வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் காலாவதியாகும் தேதி(Expiry date) தெரியுமா..?

காலாவதியான சிலிண்டரைப் பயன்படுத்துவதால் சில பல பயங்கரமான ஆபத்துகள் உள்ளன. அதனால் இனி உங்கள் வீட்டுக்கு சிலிண்டர் கொண்டு வரும் போதோ,அல்லது வாங்கும் போதோ, முதலில் காலாவதியாகும் தேதியைப் பாருங்கள்.

அப்புறம் வாங்குங்கள்.
ஏற்கனவே காலாவதியாகி இருந்தால் அதை திருப்பி தந்து விடுங்கள். ஆபத்தை தவிருங்கள்.

அந்த Expiry date - ஐ எப்படி கண்டுபிடிப்பது?

படத்தில் இருப்பது போலத் தான் ஒவ்வொரு சிலிண்டரின் இன்சைட்(inside)-லும் எழுதியிருக்கும்.

முதலில் வரும் ஆல்ஃபபெட்ஸ் லெட்டர் (alphabets letter) மாதத்தின் பெயரைக் குறிக்கிறது.

இரண்டாவதாக வரும் டூ டிஜிட்ஸ் நம்பர் (two digits number) வருடத்தின் (Year) பெயரைக் குறிக்கிறது.

A , B, C & D இந்த நான்கில் ஒரு லெட்டர்தான் ஒவ்வொரு சிலிண்டரிலும் எழுதப்பட்டிருக்கும். அதன் முழு அர்த்தம் இதுதான்.

A - மார்ச் -முதல் காலாண்டு(1st quarter)

B - ஜூன் -இரண்டாம் காலாண்டு(2nd quarter)

C - செப்டம்பர் -மூன்றாம் காலாண்டு(3rd quarter)

D - டிசம்பர் - நான்காம் காலாண்டு(4th quarter)

உதாரணத்திற்கு, மேலே உள்ள படத்தில் D-06 என்று எழுதப்பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் டிசம்பர் மாதம் 2006-ம் ஆண்டு வரை அந்த சிலிண்டரைப் பயன்படுத்தலாம்...!"

அறியாமை தவறல்லா..

அறியாமல் இருப்பது தான் தவறு.

ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு!


அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர்.

அவைகளில் சில:

1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம். - நடராஜ கோயில்

2. கும்பகோணம் அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில்உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர்
சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும் .

3. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.

4. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.

5. கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சிதருகிறார்.

6. நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதியில் 4 பேர் தூக்குவார்கள் பின்பு 8,16, கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள் கருடனும் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.

7. ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமானுஜர் உருவம் விக்ரஹமோ, வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை.குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.

8. திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.

9 கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்.

10. விருதுநகர், சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்திகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளே இல்லை.

11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிரதான சாலைகளில் சந்திப்பில் உள்ள 72 அடி ஆஞ்சநேயர்சிலையின் கண்களும்-சில நூறுமைகளுக்கு அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திருவடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.

12. வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் தூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6முதல் 12 வரையும் எண்கள் செதுக்கியுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.

13. சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக் கோட்டைதாண்டி நாகலாபுரம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீவேத நாராயண பெருமாள் தலையிலிருந்து இடுப்புவரை மனித உருவம், கிழே மீன்வடிவம் கொண்டுள்ளார்.

14. தருமபுரி – பாப்பாரப்பட்டி {16கி.மீ} இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் பெண்வடிவில் உள்ளது.

15. ராமேஸ்வரத்தில் உள்ள அனுமன் கோவிலில் குளத்தில் கல் மிதக்கும்.

உங்களுக்கு தெரியுமா ??...


 நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும் போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்... காவலரை கண்டு பயப்பட தேவையில்லை... அவர்கள் உங்களை மிரட்டுவது 1000 ரூபாய் ஃபைன்...அவர்களுக்கு லஞ்சம் தரதேவையில்லை... நீதி மன்றத்துக்கும் ஃபைன் கட்ட தேவையில்லை... 15 நாட்களுக்குள் உங்க license or vehicle papers ஐ நீதி மன்றத்தில் காட்டினால் பொதுமானது... இது சட்டத்தில் இருப்பதுதான்...நமக்குதான் தெரியவில்லை.... license இல்லையா vehicle papers இல்லையா... பணத்த எடுனு போலிஸ் சொன்னா... நான் 15 நாளில் கோர்ட்டில் காட்டிகிறேன்னு சொல்லி செல்லான்வாங்கிக்கோங்க.. 

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ??


மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள் .
அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் ,
உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர் !
உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,

ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் , இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.

இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..
பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..