இன்று #ராமநாதபுரம் மாவட்டம் பாண்டிய நாட்டின் இதயம் போன்றது. அங்குள்ள கமுதி கோட்டை சுந்தர பாண்டியனின் முக்கியமான கோட்டை.
இங்குள்ள பசும்பொன் என்ற ஊர் சங்க கால பாண்டிய மன்னன் பசும்பூண் பாண்டியன் பிறந்த ஊர் மற்றும் அவர் வழிவந்த பசும் பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த இடம் ஆகும்.
13ம் நூற்றாண்டுக்கு பின் பாண்டியர்கள் வீழ்ச்சியடைந்த பின் சேதுபதி மன்னர்கள் இராமநாதபுரத்தை ஆண்டனர். 15ம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சி வந்த பொழுது பாளையமாக இருந்தது. 1730களில் நாயக்கர் பலவீனமான போது சுதந்திர நாடாக ஆனது.
இது தவிர இங்கு ராமர் வந்து சிவனை வழிபட்டு இலங்கை செல்ல பாலம் கட்டியதாக நம்பப்படும் இராமேஸ்வரம். அங்குள்ள மிகப்பெரியகோவில் பாண்டியர்களின் கட்டடகலைக்கு சான்று.
பரமக்குடி மற்றும் அதன் அருகில் உள்ள ஏர்வாடி, கீழக்கரை, முதுகுளத்தூர், தனுஷ் கோடி போன்றவையும் பெயர் பெற்றவை.
அடுத்து வரும் நாட்களில் சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் பற்றியும் பார்க்கலாம்.
No comments:
Post a Comment