சனாதன தர்மம்

 சனாதன தர்மா என்கிற சமஸ்கிருத வார்த்தைக்கு என்ன அர்த்தம் ?

சனாதன தர்மம் என்றால் 'நிலையான ஏற்பாடு' என்று பொருள்.


சமஸ்கிருதத்தில் சனாதனம் என்றால் நிலையானது..

தர்மம் என்றால் ஏற்பாடு. 

நிலையான ஏற்பாடு. 


அதென்ன 'நிலையான ஏற்பாடு'?

பிராமணரை தலைமயாகக் கொண்டு, இந்த சமூகத்தை ஆளும் அதிகாரத்தை, பிராமணர்களே தனது கையில் தொடர்ந்து வைத்திருக்கும் நிலையான ஏற்பாடு.


சனாதன தர்மத்திற்கு விளக்கம் தரும் சனாதனிகள் பொதுவான ஆன்மீக கருத்துக்களாகவே சனாதனத்தைப் பற்றி சொல்லி மழுப்பிவிடுவார்கள்.

சரி. 

சமூகத்தில், சனாதன தர்மம் என்றால் என்ன ? அது எப்படி நடைமுறைப்படுத்தப்பட்டது? 

எவ்வாறு மக்கள் வாழவேண்டும் என்று சனாதனம் விரும்புகிறது ?


ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி வாழ்விடங்கள்(ஊர்கள் அல்லது தெருக்கள்)..  

சாதிக்குச் சாதித் தனித்தனித் தொழில்கள்..

தனித்தனி சுடுகாடுகள்..

தனித்தனி திருமண முறைகள்..

தனித்தனி சாவுச் சடங்குகள்..

தனித்தனி கல்வி முறைகள்..

உள்ளிட்ட தனித்தனி கலாச்சார நடைமுறைகளை வரையறுப்பது, அவற்றை பரம்பரை பரம்பரையாக தக்க வைப்பது சனாதனம்.

ஒரு சாதி பெறும் கல்வியைக் கூட மற்றவர் சமமாகப் பெறமுடியாது. பெறக்கூடாது என்கிறது சனாதனம்.


பிராமண, சத்ரிய, வைசிய, சூத்திர என்று முதலில் பிரிக்கப்பட்ட நான்கு வருணங்கள் தான், பிற்காலத்தில் பல உட்பிரிவுகள் கொண்ட சாதியாக விரிவாக வளர்ந்தன.


வருண அடிப்படையில், சாதி அடிப்படையில் காலங்காலமாய் செய்து வந்த குலத் தொழிலை ஒருவர் மீறக் கூடாது என்பதை வலியுறுத்துவதும், அதை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவதும் தான் சனாதனம்.


சனாதனம் காப்பாற்றி வரும் முக்கியமான விஷயம், எந்த ஒரு சாதியும் இன்னொரு சாதிக்கு சமமில்லை. 

ஏதோ ஒரு சாதிக்கு மேலே அல்லது கீழே தான் இருக்கும். இருக்க முடியும்.

அனைத்து சாதிக்கும் மேலே உயரத்தில், உயர்வாய் இருப்பது, கருதப்படுவது, மதிக்கப்படுவது பிராமண சாதி மட்டுமே. 

பிராமண சாதி, கடவுளுக்கும் மேலே என்கிறது சனாதனம்.


நான்கு வர்ணங்களைத் தாண்டியுள்ள சமூகப் பிரிவினரிடமிருந்து அதாவது அந்த வர்ணங்களுக்கு உட்படாத பூர்வீகக் குடிமக்களிடமிருந்து(பஞ்சமர்கள் - தலித்துகள் - இவர்கள் தான் ஐந்தாவது வர்ணம்), நிலம் கல்வி மற்றும் அதிகாரம் போன்றவற்றைப் பறித்து அல்லது மறுத்து அவர்களைத் தொடர்ச்சியாக அடக்கி ஒடுக்குவது தான் சனாதனம்.


குழந்தை திருமணத்தை நியாயப்படுத்துவதும், விதவை மறுமணத்தைத் தடுப்பதும், கணவன் இறந்ததும் மனைவியை உடன் கட்டை ஏற்றிப் படுகொலை செய்வதும், போன்ற நடவடிக்கைகள் தான் சனாதனம். 

மாதவிடாய்காலத்திலும் கர்ப்ப காலத்திலும் பெண்களை ஒதுக்கி வைத்து ஆணாதிக்கப் போக்குகளை நிலைப்படுத்துவதும் பெண்களைத் தாழ்மைப் படுத்துவதும் தான் சனாதனம் 


இந்த அனைத்தையும் சேர்த்த பார்ப்பனீய கோட்பாடுகளை, வலியுறுத்துவது தான் சனாதனம்.

இவற்றை இன்றும் வேறு ஏதாவது ஒரு வடிவத்தில் கொண்டு வந்து சமூகத்தில் திணித்து நிலைநிறுத்த முற்பட்டு வருகிறது பார்ப்பனீயம்.


சனாதனம் இந்து மதமல்ல. அது இந்துத்துவாவின் கோட்பாடு. 

சனாதன தர்மா பார்ப்பனீயத்தின் அதிகாரக் கொள்கை கோட்பாடு.









👆
இப்படியும்  ஒரு வரலாற்று உண்மையை இப்பொழுது நாம் தெளிவாக அறிந்துகொண்டோம் என்று நாம் நினைக்கும்பொழுது இன்னொருபக்கம் பார்பனீயர்கள் கூறும் பொதுவான விளக்கம் 
👇


சனாதனம் அப்படினா ஏதோ பெரிய பெரிய அர்த்தம் நிறைந்த வார்த்தை எல்லாம் இல்லீங்க..


நாம , நம்ம அம்மா அப்பா தினமும் நம்ம பூஜை அறையில் சாமி கும்பிடுறோம் பாருங்க அது சனாதனம்.


ஊர்ல திருவிழா நடக்கும் போது காப்பு கட்டி ஒன்னுகூடி சாமி கும்பிடுறோம்ல அதுவும் சனாதனம்தான்.


 அமாவாசை ஆடி பௌர்ணமிக்கு விரதம் இருந்து காக்கைக்கு உணவு கொடுத்துட்டு அதுக்கு அப்புறம் நாம சாப்பிடுறோம்ல அது சனாதனம்.


 பழனிக்கு மாலை போட்டு போவதும் சனாதனம் தான். ஐயப்பனுக்கு விரதம் இருந்து நடந்து செல்வதும் சனாதனம்தான்.


சனாதனம் என்பது இந்த மண் சார்ந்தது. இந்த மண்ணுக்கு சொந்தமானது. நம் முன்னோர் , பெரிய பெரிய ஞானிகள் பின்பற்றியது.


கிருஸ்தவர்களுக்கு ஒரு வழிபாட்டு முறை உள்ளது.‌‌ இஸ்லாமியர்களுக்கு ஒரு வழிபாட்டு முறை உள்ளது அதே போல் தான் ஹிந்துக்களுக்கும்.


ஆனால் இங்கு இருக்கும் திராவிட கும்பலுக்கு ஹிந்து என்றால் மட்டும் எரியக்கூடாத இடமெல்லாம் எரியும் போல.


இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ஒருவர் ஹிந்துக்களுக்கு எதிராக சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கும் அறிய நிகழ்வு இங்குதான் நடக்கும். 


கேட்டால் "ஆரியன் பார்ப்பான்னு" உருட்டுவானுங்க . ஏன்டா இந்த கலியுகத்துல எத்தனை நாளைக்குதான் நமத்து போன இதே வரியை சொல்லி உருட்டுவீங்க. பிரசாந்த் கிஷோர் என்னும் பார்ப்பானோ , துர்கா அம்மா கோவில் கோவிலா ஏறவில்லை எனில் இந்த ஆட்சி ஏது.?_


பாஜக பிடிக்கவில்லையா , பாஜகவை எதிர்த்து  நேரடியா அரசியல் சண்ட செய்‌ அதுதான் துணிச்சல்.


அதைவிட்டுவிட்டு எதுக்கெடுத்தாலும் பார்ப்பான் , சனாதனாம், ஹிந்து கடவுள் இல்லைனு...... மலிவு அரசியல் எத்தனை நாளைக்கு இதை வச்சே உருட்ட முடியும்‌


கிருஸ்தவத்தில் பணம் சம்மாதிப்பற்காக மட்டும் ஒரு கூட்டம் சுற்றி திரிகிறது அதை எதிர்த்து மாநாடு போட வேண்டாம்   திராவிடத்தால் எதிர்த்து அறிக்கை விட முடியுமா....??  முடியவே முடியாது காரணம் சிறுபான்மையினர் ஓட்டு போயிரும்


அவன் பொருளை எடுத்து அவனையே போடனும்னு " படத்தில் ஒரு காட்சி வரும் அதே மாதிரி ஹிந்துக்கள் முழிக்கும் போது திராவிடம் புதையும் சூழ்நிலை உருவாகும்‌.


சுய நலத்திற்காக கட்சிகளில் இருக்கும் ஹிந்துக்கள்..


கொஞ்சமாவது சொந்த வாழ்வியல் தர்மத்திற்கு  கட்சிகளை கடந்து விசுவாசமாக இருங்கள்..


விழித்துக் கொள்ளுங்கள்..,ஹிந்து சகோதர, சகோதரிகளே.

No comments:

Post a Comment