பத்து வருடம் கழித்து உலகம் எப்படி இயங்கும்..(அழகான கற்பனை )


கார்னிங்(Corning)என்ற அமெரிக்க கண்ணாடிகள் (Glass and ceramic) தயாரிக்கும் நிறுவனம்சமீபத்தில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. விளம்பரம் என்று சொல்ல முடியாது குறும்படம் என்று சொல்லலாம்2025ஆம் ஆண்டு  உலகம் எப்படி இயங்கும் என்று ஒரு சுவாரசியமான கற்பனையாக இருக்கிறது இந்த படம்.

எதிர்க்காலத்தில் இந்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கு  அவர்களின் கண்ணாடிகள் எப்படி உதவக்கூடும் என்பது போல் இந்த படம்  உள்ளது .எதிர்வரும் காலங்களில்  உலகம் இப்படி இயங்கினால் எப்படி இருக்கும் என்று பார்ப்பவர்களையும்  ஏங்க வைத்துவிடுகிறது.

நம் நாட்டில் மின்சாரம் தடையில்லாமல் வந்தாலே நமக்கு ஒரு பெரிய வரமாக இருக்கிறது.வரும் தலை முறைக்காவது நம் நாட்டிலும் இந்த விளம்பரத்தில் உள்ளது போல் வசதிகள் வாய்க்கட்டும்.

No comments:

Post a Comment