எது குறித்தும் அஞ்சாதீர்கள்...
எல்லாவற்றுக்கும் தீர்வு உண்டு...


அறிவுக்குள் உணர்ச்சியும் உணர்ச்சிக்குள் அறிவுமாகப் பின்னப்பட்ட ஓர் அழகான பின்னல் ஆடையே நம் வாழ்க்கை
அறிவு நம் வாழ்க்கைக்கு இலக்கணம் வகுக்கிறது. உணர்ச்சி இலக்கணத்தின் வழியே பொங்கும் இலக்கியமாகச் சுழன்று வெளிப்படுகிறது 
அறிவு நம் வாழ்க்கை எனும் சக்கரத்திற்க்கு அச்சாணியாகத் தாங்கிய வண்ணம் அசையாமல் நிற்கிறது. உணர்ச்சி சக்கரமாகச் சுழண்று நம் இன்ப துன்பப் பயணத்தை நடத்தித் தருகிறது.
இந்த வாழ்க்கைப்பயணத்தில் ஏதாவது தடை நேர்கிறது என்றால் அதற்க்கு உங்கள் அறிவு உணர்ச்சி எனும் இரண்டு பாகங்களில் ஏதோ ஒன்றில் தொழில் நுட்பச் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது என்றே பொருள்.
எந்த மாற்றங்களுக்கும் தயார் என்ற ஊக்கத்துடன் மனத்தை வெட்ட வெளியாக திறந்து வைத்திருப்போருக்கு எந்த வெற்றியும் இந்த உலகில் எளிதாகக் கிடைக்கும்.
 மற்றவர்கள்தான் எனக்காக மாற வேண்டும் என்று அடம் பிடிப்பவர்களுக்குத் தான் எல்லாமே சிரமமாகத் தென்படும்.
மாற மாட்டேன் என்று அடம் பிடிக்கும் அந்த பிடிவாத மனத்திற்க்கு பெயர் தான் விதி... விணைப்பயன்... துரதிர்ஷ்டம்... என்பன போண்ற பல பெயர்கள் வைத்துள்ளோம்.
சமையலில் உப்பு சற்று அதிகமாகத் தெரிந்தால் தண்ணீரை சேர்த்து சரி செய்யலாம். தண்ணீர் அதிகமாகி சப்பென்று இருந்தால் சிறிது உப்பு சேர்த்து சரி செய்யலாம்.
அதுபோல் உணர்ச்சி சார்ந்த சிக்கல்களுக்கு சிறிது அறிவைக் கலந்தால் சரியாகிவிடும் அறிவு சார்ந்த சிக்கல்களுக்கு சிறிது உணர்ச்சியைக் கலந்தால் சரியாகிவிடும்.
எல்லாமே தொழில்நுட்பக் கோளாறுதான்

எனவே எதர்க்கும் அஞ்சாதீர்கள். எல்லாவற்றிற்க்கும் தீர்வு உண்டு.



வாழ்க வளமுடன்
  
கனவுகள் தான் உலகை ஆள்கின்றன.
        கனவுகள் தான் உலகை ஆள்கின்றன.  இது என் கருத்து.  இது என் கருத்து மட்டுமல்ல. உலகத்தில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையுமாகும்.   
        உங்களுக்கு ஒரு கேள்வி எழுந்திருக்கும்.  அது என்னவென்றால், உங்கள்101 கனவுகளை அடைவது எப்படி? உங்கள் மனத்திலே ஒரு எண்ணம் தோன்றியிருக்கும். என்னிடம் 101 கனவுகள் இருக்கின்றதா? ஆம். உறுதியாகச் சொல்வேன்.  நிச்சயம் உங்களிடம் 101 கனவுகள் மட்டுமல்ல, அதைவிட அதிகமாகவும் இருக்கிறது.  முதலில் இந்த 101 கனவுகள் என்ன? அதை அடைவது எப்படி? என்று பார்ப்போம்.
        நாம் இருக்கும் நிலை, நம் பொருளாதாரம், நம் குடும்ப நிலை, அனைத்திற்கும் காரணம் நம் கனவுகள்தான் என்று சொன்னால் உங்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.  அல்லது ஆச்சரியமாக இருக்கும்.  வாழ்வில் சிலர் மட்டும் அனைத்து செல்வத்துடனும் வெற்றி பெற்றுக்கொண்டே மகிழ்ச்சியாக இருக்கிறார் கள்? மேலும் மேலும் வளர்ந்துகொண்டு இருக் கிறார்கள்? மற்றவர்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடனில், கஷ்டத்தில், தோல்வியில் உழலுகிறார்கள்.  இதற்கெல்லாம் காரணம் அவரவர்கள் மனதிலே வைத்திருக்கின்ற கனவுகள்தான் காரணம் என்றால், நிச்சயம் உங்களுக்கு வியப்பாகத்தான் இருக்கும்.  ஆனால் இது நிரூபிக்கப்பட்ட உண்மை.
      சமீபத்திலே மனதைப் பற்றி, கனவுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்த அறிஞர்கள் மனிதர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 50,000 (ஐம்பதாயிரம்) எண்ணங்களுக்கும் அதிகமாக எண்ணுகிறார்கள். அதில் கிட்டத்தட்ட 80 சதவிகித அதாவது 40,000 (நாற்பதாயிரம்) எண்ணங்கள் எதிர்மறை (Negative) எண்ணங்களாக இருக்கின்றன என்று கூறுகிறார்கள்.  உலகத்தில் இருக்கின்ற அனைத்து செல்வங்களும் கிட்டத்தட்ட 95 சதவிகித செல்வத்தை 5 சதவிகித மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் இந்த மீதமுள்ள 5 சதவிகித செல்வத்துக் காக கிட்டத்தட்ட 95 சதவிகித மக்கள் உலகம் முழுவதும் போட்டிப்போட்டுக் கொண்டிருக் கிறார்கள்.  இதற்குக் காரணம் என்ன? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நம்மில் சிலபேருக்கு நாம் கற்பனை எப்படி செய்வது? அல்லது சிலநேரம் செய்துவிட்டு இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று கைவிட்டுவிடுகிறார்கள்.  நான் உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்ல விரும்பு கிறேன். நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உங்களையும் அறியாமல் கற்பனை செய்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள்.  அது ஆசைகளாக, எண்ணங்களாக, விருப்பங் களாக அல்லது எதிர்மறை கற்பனையாக அல்லது ஆக்கப் பூர்வமான கற்பனையாக இருக்கிறது.  இந்த உலகத்தில் இருக்கின்ற அனை வரும் கற்பனை செய்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவரவர் மனநிலை நம்பிக்கையைப் பொறுத்து, அவரவர் கற்பனை வளமானதாகவோ,  அல்லது  வளம் குன்றியதாகவோ இருக்கிறது.  முதலில் நம் மனதில் இருக்கும் மனப்படத்தை (கற்பனையை) சீர்செய்வோம்.  அதை எப்படி செய்வது?
நம் வாழ்வில் வீடு, வாகனம், மற்றும் 16 செல்வங்களை அடைவது எப்படி? என்று உங்களைப் பார்த்துக் கேளுங்கள். இந்தப் பிரபஞ்சத்தில் கிட்டத்தட்ட 700 கோடி மக்களுக்கும் மேல் இருக்கும் இந்த உலகில் நாம் மட்டும் வளமாக இருக்கக்கூடாதா? என்ன பாவம் செய்தேன்? அவரால் சாதிக்க முடியும்போது என்னால் சாதிக்க முடியாதா என்று உங்களையே நீங்கள் கேளுங்கள். பொறுத்தது போதும் “Enough is Enough” சிலிர்த் தெழுங்கள்.
நீங்கள் எது கேட்டாலும் கிடைக்கும்.  உங்களால் எதுவும் முடியும்.  உங்களுக்கு பணம் ஒரு பிரச்சனை அல்ல என்றால், நீங்கள் இந்த வாழ்க்கையில் என்னவெல்லாம் ஆசைப்படுவீர்கள் என்பதை ஒரு சார்ட் பேப்பரில் (Chart Paper) அல்லது நோட்டுப் புத்தகத்தில்
என் வாழ்வில் ஆசைப்படும் விஷயங்கள் என்ன? என் வாழ்க்கையில் என்ன வேண்டும்? குறிக்கோள்கள் என் விருப்பங்கள் என்ன? என்பதை மனம் விட்டு எழுதுங்கள்.  தினமும் ஒரு பத்து கனவுகள் என்று எழுதினால் கூட ஒரு பத்து நாளிலே 100க்கும் மேலாக 101 கனவுகள் நீங்கள் எழுதியிருப்பீர்கள்? பின்னர் நீங்கள் செய்யவேண்டியது, இதையெல்லாம் என் வாழ்வில் அடையமுடியும் நியாமான கனவுகள் என்று நம்புங்கள்.  பின்பு நீங்கள் செய்ய வேண்டியது, எப்படி கனவு காண்பது? அதை எப்படி அடைவது என்பதைப் பார்ப்போம்? பலபேருக்கு பெரிய பிரச்சனையே  எப்படி கனவு காண்பது என்பதுதான். உதாரணமாக ஒரு கற்பனை செய்வோம்…
“ஒரு எலுமிச்சைப் பழச்செடியில் எலுமிச்சைப் பழத்தை பறியுங்கள். அந்தப் பழத்தை கையில் வைத்திருப்பதாக உணருங்கள்.  அந்த எலுமிச்சைப் பழத்தை ஒரு கத்தியால் இரண்டாகப் பிளந்து, அதிலே சிறிது உப்பைத் தடவுங்கள் இரண்டு கையிலும் பாதி, பாதி பழத்துண்டுளை வைத்துக்கொள்ளுங்கள்.  இப்போது நீங்கள் செய்ய வேண்டியது அப்பழத்துண்டுகளை கையில் எடுத்து நாக்கில் சாரைப் பிழிந்துவிடுவதாக மனக்கண்ணால் நினையுங்கள்” நீங்கள் இதனைப் படிக்கும்போதே உங்கள் நாக்கில் எச்சில் ஊறியிருக்கும்.  நான் உதாரணத்திற்காத்தான் கூறினேன்.  இதைப் போல் நீங்கள் கார் வாங்குவதாக கற்பனை செய்தால், அந்த குளிர்ச்சியான காரிலே செல்வ தாக அந்த பிராண்ட், கலர், அனைத்தையும் கற்பனையில் பாருங்கள்.  நீங்கள் அந்தக் காரின் குளிர்ச்சியை அனுபவிப்பதை உணருங்கள்.  ஏற்கனவே நீங்கள் கார் ஓட்டிச் செல்வதாக எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கின்றதோ, அப்பொழுதெல்லாம் மனத்திரையிலே அந்தக்காரை ஓட்டிப்பாருங்கள். நிச்சயம் உண்மையாகவே அடைவீர்கள்.  இதற்கு நானே ஒரு உதாரணம்.
நீங்கள் எழுதிய இந்த 101 கனவுகளும் நடந்துவிட்டால் எப்படி இருக்கும்? நினைத்துப் பாருங்கள். ஒரே உற்சாகம், குடும்பத்தில் மகிழ்ச்சி, பொருளாதாரத்தில் நிறைவு, வெற்றிப்பெற்று சாதித்த மனநிலை, வெளிநாடு பயணம் இதையெல்லாம் நினைத்துப் பாருங்கள்.  கொண்டாடுங்கள்.  நம்மிடம் இருப்பது ஒரே வாழ்க்கை (No next) நிறைவாக வாழ கற்பனை செய்யுங்கள்.  சுதந்திரம் அடைவதற்கு முன்பே மகாகவி பாரதியார் ” ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே” என்று சுதந்திரம் அடைந்து விட்டோம் என்ற நம்பிக்கையில் பாடியதைப் போல, ஒவ்வொரு கனமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் கனவுகள் நிறைவேறி விட்டதாக உணருங்கள். படம் திரையில் வெளியாவதற்கு (Release) முன்பு நாம் முன் கண்ணோட்டத்தைப் (Trailor) பார்ப்பதைப் போல் நிச்சயம் மனத்திரையில் ஒரு முன்னோட்டத்தை ஓட்டிப்பாருங்கள்.  உங்கள் கற்பனையின் உயரம்  உங்கள் உயரம்.  ஒரு மாபெரும் விளை நிலத்தில் கற்பனை என்னும் விதைகளை விதைத்து, அந்த விதைகளுக்கு தண்ணீர் ஊற்றி பாதுகாத்து வளர்த்து வாருங்கள்.  ஆடு, மாடுகள் வளர்ந்து வரும் செடியை மேய வருவதுபோல் உங்கள் கூடவே இருப்பவர்கள் அல்லது அவநம்பிக்கை உடையவர்கள் உங்கள் கனவுகளை நசுக்க வரலாம்.  உங்களால் முடியாது என்று கூறலாம்.  நம்பிக்கை இழக்காதீர்கள்.  இது ஒரு தவம்.  கனவுகளை பாதுகாத்து வளர்த்து வாருங்கள்.  செடிகளுக்கு நல்ல உரமிடுவதைப் போல, நல்ல புத்தகங்களை படித்து வாருங்கள். சாதனை யாளர்களோடு பழகுங்கள். சுயமுன்னேற்ற பயிற்சி முகாம்களுக்கு செல்லுங்கள்.  நிச்சயமாக உங்களின் 101 கனவுகள் நிறைவேறும்.  உங்களின் வாழ்க்கையில் மாற்றம் நிச்சயம் நடக்கும்.  உங்கள் கனவுகள் மெய்ப்படும்.
சந்தனக்காற்று
நம் ஜன்னலில் வீசட்டும் 
சரித்திரம்
நாளை
நம் சாதனை பேசட்டும்...

ன்றி

வணக்கம்.