Google+ Comments Box பயன்படுத்தலாமா?

Google+ Comments Box பயன்படுத்தலாமா? நல்ல கேள்வி! Google+ Comments Box அறிமுகப்படுத்தப்பட்டு இன்னும் ஒரு நாள் கூட ஆகவில்லை. ஒரு சிலர் மாறி  விட்டனர். பலர் மாற ஜோசிக்கின்றனர். இக்கேள்விக்கு பதில் வேண்டாம் என்பதே ஆகும். Google+ Comments Box பயன்படுத்த தொடங்கியது முதல் இது வரை பல பிரச்சனைகள் கூகுளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது. இதில் வெளிப்படையாக சில தீமைகள் இருந்தாலும் தொழில்நுட்ப ரீதியில் பல சிக்கல்கள் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டு இருக்கிறது. ஒரு வேளை நீங்கள் preview பார்க்கும் போது தோன்றாத பிரச்சனை உங்கள் வாசகருக்கு தோன்றி இருக்கலாம். அவை தொடர்பாக சில...

Google+ Comments Box அறிமுகப்படுத்தப்பட்டவுடன் பலர் இதை பற்றி எழுதி இருந்தார்கள். எனக்கும் மின்னச்சலில் வரவேற்பு வந்து இருந்தது. ஆனால் எழுதவில்லை....

இதில் இனம் காணப்பட்ட சில பிரச்சனைகள் -

  • G+ profile இல்லாத எவரும் கருத்து இடம் முடியாது (openID, Anonymous வசதிகள் இல்லை)
  • Comment இல் Embed setting மட்டுமே உள்ளது. வேறு வகைகள் இல்லை. (popup)
  • பலருக்கு பழைய comments தோன்றவில்லை.
  • அனைத்து comment களும் blog owner ஆல் கட்டு படுத்த முடியாது. ஒருவர் அவதூறாக எழுதினாலும் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.
  • blogger dashboard இல் Comment எண்ணிக்கை 0 என காட்டுகிறது.
  • Dashboard இல் இருந்து moderate செய்ய முடியவில்லை. ஒவ்வொரு பதிவாக சென்று தால் பார்க்க வேண்டி // கட்டுபடுத்த வேண்டி  உள்ளது.
  • Google தேடல் முடிவில் கருத்துரைகள் இடம் பெறுவது குறித்து அதாவது SEO குறித்து எதுவும் சொல்லவில்லை.
  • cookie filters களுக்கு இதுவும் ஆதரவு அளிப்பதால் commets சாதாரண பார்வையாளருக்கு தோன்றுவதில் கூட இடர்பாடு ஏற்படுகிறது.
இப்பிரச்சனைகள் கால ஓட்டத்தில் நீக்கப்படும். என்னை போல காற்று வாங்கும் comment box வைத்து இருப்பவர்களுக்கு புதிய மாற்றத்தால் ஒருவரும் பாதிக்கபட்ட போவதில்லை. (அதனால் தான் நான் Disqus உடன் உள்ளேன்)
ஒரு பதிவில் 100 கருத்த்துரைகளை அள்ளும் பதிபவர்களின் வாசகர்கள் நிச்சயம் சிரமப்படுவார்கள். எனவே புதிய மாற்றங்களை உடனடியாக பரிசோதித்து பார்க்காதீர்கள்.

Google எப்பாடு பட்டாவது G+ இனை facebook அளவுக்கு வளர்க்க படாத பாடு படுகிறது. அதன் ஒரு காய் நகர்த்தல் தான் இது.

யாரவது அவசரப்பட்டு Google+ Comments Box மாறி இருந்தால் உங்கள் blogger இல் Google + tab இல் என்று  Use Google+ Comments on this blog உள்ள சரியை எடுத்து விடுங்கள். மீள பழைய நிலைக்கு செல்ல முடியும்.


என்னை பொருத்தவரை எப்போது Disqus தான் சிறந்தது.

இத்தகவல்கள் அனைத்தும் Google Group மற்றும் Blogger Hashtag மூலம் திரட்டப்பட்டது.