சமூக இணையதளங்களுக்கு இடையே மிகப்பெரிய போட்டி நிலவுவதால் ஒவ்வொரு சமூக தளமும் ஏதாவது ஒரு புதிய வசதிகளை அறிமுகபடுத்தி கொண்டே உள்ளது. வாசகர்களை தக்க வைத்து கொள்ளவும் மேலும் புதிய வாசகர்களை கவரவும் ஏதாவது புதிதாக அறிமுகபடுத்தி கொண்டே இருக்க வேண்டும் என்பது கூகுளின் வழக்கம். இப்பொழுது கூகுள் பிளஸ் தளத்தின் தோற்றத்தை முழுமையாக மாற்றி அசத்தலான தோற்றத்தை வெளியிட்டு உள்ளது கூகுள் நிறுவனம்.  இந்த அசத்தலான தோற்றத்துடன் சில புதிய வசதிகளையும் அறிமுகபடுத்தி உள்ளது கூகுள் அவைகள் என்னவென்று கீழே பார்க்கலாம். 

பழைய தோற்றத்தில் மேலே இருந்த மெனு பட்டன்களை இடது ஓரத்தில் கொண்டு வந்து உள்ளது. மற்றும் அந்த பட்டன்களை நமக்கு வேண்டிய படி drag செய்து நகர்த்தி கொள்ளலாம். அது மட்டுமில்லாமல் Explore என்ற ஒரு புதிய வசதியும் உள்ளது. அதில் சமீபத்தில் கூகுள் பிளசில் அதிகமாக +1 செய்யப்பட இடுகைகள் பார்த்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment