ஜீமெயிலில் அட்டாச்மென்ட் பைல்களை எளிதாகத் தேடிப்பெறலாம்.


  • இன்றைக்கு மின்னஞ்சல் அனுப்பும் அனைவரும் அவர்களுக்கு தேவையான பைல்களை இணைத்து அனுப்புகின்றனர். ஏதேனும் ஒரு சமயத்தில் திடீரென ஒரு பைல் அவசரமாக தேவைப்படுகையில் எந்த மின்னஞ்சலில் இருந்து வந்தது என்று தெரியாமல் தேடிக்கொண்டு இருக்க நேரிடலாம். ஆனால் ஜீமேய்லில் மிக எளிதாகக் கண்டறிய வசதி ஒன்று உள்ளது. இதற்க்கு முதலில் 

  • மேற்கண்ட தளத்திற்கு செல்லவும். அதன் பின் இதில் உங்கள் ஜீமெயில் கணக்கை கொடுத்து உள் நுழையவும். இப்போது கூகுல் கணக்கு இதைப்பயன்படுத்த அனுமதி கேட்கும். அனுமதி கொடடுத்து உள்ளே நுழையவும். இப்பொழுது கட்டளைகளுக்கு அனுமதி கோரும் படி கேட்டுக்கொள்ளும். அதற்கும் அனுமதி கொடுத்து உள் நுழையவும். அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் மின்னஞ்சலில் உள்ள கோப்புகளின் எண்ணிக்கையையும் எத்தனை மின்னஞ்சல்கள் கோப்புகளை கொண்டுள்ளன என்பதையும் காட்டும். தற்பொழுது அந்த பக்கத்தில் மேலே உள்ள பிரவுஸ் மற்றும் சர்ச் என்ற தலைப்புகளில் பிரவுஸ் என்பதை தெரிவு செய்யவும். அதன் பின் ஒரு விண்டோ தோன்றும். அதில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்தால், குறிப்பிட்ட அட்டாச்மெண்டை பெயர் கொடுத்து தேடலாம்.    

No comments:

Post a Comment