தமிழ்ப் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டு என்பது தமிழர்கள் தங்கள் ஆண்டின் புத்தாண்டாக கொண்டாடும் விழாவாகும். தற்போது தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் ஈழத்திலும் சித்திரை மாதத்தின் முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. 2008-2011 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் தை மாதம் முதல் நாளை தமிழக அரசு புத்தாண்டாக அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.
தமிழ் புத்தாண்டு வரலாறு
புதுச்சேரியிலும், ஈழத்திலும் வழக்கத்திலும் தமிழ்நாட்டில் 2008க்கு முன்பும் வழக்கத்தில் இருந்த சித்திரை முதல் நாள் புத்தாண்டு வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்கு பின் 78ம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்களால் நம்பப்படுகிறது. சில வரலாற்று ஆசிரியர்கள் கனிஷ்கன் என்ற அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுகின்றனர். தை முதல் நாள் தான் புத்தாண்டு என்று திமுக அரசால் 2008 தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசு ஆணையாக அறிவிக்கப்பட்டது. 2011 இல் இது அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டானது.
1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின் தலைமையில் 500 பேர் கொண்ட அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது.

கருத்து வேறுபாடுகள்

2006-2011 வரையிருந்த தமிழக அரசு சனவரி 29, 2008 அன்று அறிவித்த, தை முதல் நாள் புத்தாண்டு சில பிரிவினரிடையே அதிருப்தியை உருவாக்கியது. தமிழக அரசுக்கு தமிழக பாரம்பரிய விடயங்களில் தலையிட அனுமதி உண்டா என்றும் கேள்விகள் எழுந்துள்ளது. அதன்படி 2006-2011 வரையிருந்த தமிழக அரசும், அவ்வரசு அறிவித்த புத்தாண்டு தினத்துக்கு ஆதரவு தந்த பிரிவை சேர்ந்த மக்களும் தையில் தமிழ் புத்தாண்டை கொண்டாடினர். ஆகத்து 23, 2011ல் அப்போது ஆட்சியில் இருந்த தமிழக அரசு மீண்டும் சித்திரை ஒன்றை தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்தது.



No comments:

Post a Comment